புதிதாக சொத்து வாங்குவோர்,
அது தொடர்பான பத்திரத்தை
பதிவு செய்வதற்காக, சார் - பதி
வாளர் அலுவலகத்துக்குள் செல்
லும் முன், சில அடிப்படை விஷ
யங்களை தெரிந்துக் கொள்ள
வேண்டும்.
ஒரு சொத்தை வாங்குவது
என்று
முடிவாகி விட்டால்,
தொடர்பான அனைத்து
சந்தேகங்களிலும் தெளிவு பெற
வேண்டும். பொதுவாக, பத்திரத்
தில் விற்பனை செய்பவர், வாங்
குபவர் பெயர் மற்ற விபரங்கள்
தெளிவாக இருக்க வேண்டும்.
அந்த இடம் விற்பனை செய்
பவருக்கு எப்படி வந்தது என்ற
விபரம், பழைய ஆவண எண்,
எந்த சார் - பதிவாளர் அலுவலகத்
தில் பதிவு செய்யப்பட்டது என்ற
விபரமும், கிரைய விலை மற்
றும் பணம் கொடுத்த விபரமும்,
சொத்தின் புல எண் மற்றும் கதவு
எண், தெருவின் பெயர், கிராமத்
தின் பெயர், சொத்தின் நான்கு
எல்லைகள் விபரமும் கண்டிப்
பாக அனைத்து ஆவணங்களிலும்
இடம் பெற வேண்டும்.
குறிப்பாக, வில்லங்க சான்று,
வருவாய் ஆவணங்கள், பத்திரங்
கள் ஆகியவற்றின் உண்மை தன்
மையை சரி பார்த்துக் கொள்ள
வேண்டும். இதன்பின், பதிவு
செய்வதற்கான கிரைய பத்தி
ரத்தை தயார் செய்ய வேண்டும்.
பதிவுக்கான கிரைய பத்தி
ரத்தை தயாரிப்பதில் ஆவண
எழுத்தர்களின் உதவியை பெறு
வது சரியான வழிமுறையாக
உள்ளது. ஆவண எழுத்தர்களை
இதற்காக தான் பதிவுத்துறை உரி
மம் கொடுத்து அமர்த்தி உள்ளது.
தற்போது, ஆன்லைன் முறை
யில் பத்திரப்பதிவு என்பதால்,
பதிவுத்துறை இணையதளத்தில்
இதற்கான வழிகாட்டுதல்கள்
வழங்கப்பட்டுள்ளன. இந்த வழி
காட்டுதல்கள்
அடிப்படையில்
செயல்பட்டால் சிக்கல் இன்றி
பத்திரப்பதிவு முடியும்.
ஆன்லைன் பத்திரப்பதிவில்
பொது மக்கள் தானாக விண்
ணப்பிக்கவும், ஆவண எழுத்தர்
கள் வாயிலாக விண்ணப்பிக்கவும்
தனித்தனி வசதிகள் செய்யப்பட்
டுள்ளன. இதில், ஆவண எழுத்
தர்கள் வாயிலாக சென்றாலும்,
உங்கள் பெயரில் விண்ணப்பித்து
ஆன்லைன் திட்டத்தில் செல்வது
நல்லது.
எவ்வளவு பணம் அக்ரிமென்ட்
போடும் போது கொடுக்கப்பட்
டது, எவ்வளவு பணம் காசோ
லையாக கொடுக்கப்பட்டது, எவ்
வளவு பணம் வங்கி கணக்கில்
கட்டப்பட்டது, எவ்வளவு பணம்
ரொக்கமாக கொடுக்கப்படுகிறது
என, தெளிவாக குறிப்பிட
வேண்
டும்.
மேலும், பத்திரப்பதிவுக்கான
தகவல்களை உள்ளீடு செய்யும்
போது, உங்கள் வீட்டு முகவ
ரியை கொடுப்பது போன்று,
தொடர்புக்கான இடத்தில், உங்
கள் தொலைபேசி எண்ணை
மட்டுமே கொடுப்பது அவசியம்.
இது விஷயத்தில் பலரும் தங்
கள் மொபைல் போன் எண்க
ளையும், இமெயில் முகவரியை
யும் கொடுக்க தயங்குகின்றனர்.
இதனால், ஆவண எழுத்தர்
கள் தங்கள் மொபைல் எண்,
இமெயில் முகவரியை அளிக்கின்
றனர்.
இதனால், பத்திரப்பதிவு
தொடர்பான பதிவுத்துறை தக
வல்கள் விண்ணப்பதாரருக்கு
நேரடியாக கிடைப்பது தடைபடு
கிறது. பதிவு முடிந்த நிலையில்
பத்திரத்தை திரும்ப பெறுவதற்கு
பதிவுத்துறை அழைப்பது குறித்த
தகவலும் விண்ணப்பதாரருக்கு
தெரியாமல் போகும் நிலை ஏற்
படுகிறது.
எனவே, பத்திரப்பதிவுக்காக
சார் பதிவாளர் அலுவலகம்
செல்வோர் இது போன்ற அடிப்
படை விஷயங்களை தெளிவு
படுத்திக் கொள்வது அவசியம்
என்கின்றனர் பதிவுத்துறை
அதிகாரிகள்.
No comments:
Post a Comment