சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை வகுப்புகள்; விண்ணப்பப் பதிவு தொடங்கியது - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, May 14, 2021

சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை வகுப்புகள்; விண்ணப்பப் பதிவு தொடங்கியது



சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை வகுப்புகளில் சேர நேற்று முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள், ஜூன் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான சென்னை பல்கலைக்கழகம் 1851-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 


ஆரம்பத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை ஆகிய அனைத்துத் துறைகளும் இருந்தன. நீண்ட காலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது. பின்னர் சட்டம், பொறியியல், மருத்துவம் ஆகிய பிரிவுகளுக்குத் தனி பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டு, அவற்றுடன் அப்பிரிவுகள் இணைக்கப்பட்டன இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் தற்போது இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதுகலை வகுப்புகளில் சேர நேற்று முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. 


விருப்பமுள்ள மாணவர்கள், ஜூன் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அத்துடன் எம்.ஃபில்., முதுகலை டிப்ளமோ, டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளுக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.354 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு: https://egovernance.unom.ac.in/cbcs2122/ விண்ணப்பிப்பதில் சந்தேகம் ஏற்பட்டால் https://egovernance.unom.ac.in/cbcs2122/AdmissionPGMPHIL/FrmInsruct என்ற முகவரியைக் காணலாம்.

No comments:

Post a Comment