இல்லத்தரசிகளின் சிக்கலாக உருவெடுக்கும் மன அழுத்தம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, May 16, 2021

இல்லத்தரசிகளின் சிக்கலாக உருவெடுக்கும் மன அழுத்தம்



வேகமாக நகரும் எந்திர வாழ்க்கை முறையில், சக சினைகளில் மன அழுத்தம் என்பது மிக முக்கிய மானது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகள், வெளிநபர்கள், பணியாளர்கள், நண்பர்கள் ஆகியோர்களிடம் பழகும் வாய்ப்பு கிடைப்பதால் மன அழுத்தத்திலிருந்து தப்பி விடுகிறார்கள். 

வீட்டி லிருக்கும் பெண்கள், கணவர், குழந்தைகளுக்கான பொறுப்புக்களை முடித்து தனிமையில் இருக்கும் சூழலில், டி.வி, சமூக வலைத்தளங்கள் எனப் பலவற் றிலும் மனதைப் பாதிக்கும் விஷயங்களில் நேரத்தை செலவிடுகிறார்கள். அதனால், மனதில் தேவையற்ற எண்ணங்கள் உருவாகி, மன அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு நாளில் சுமார் 20 ஆயிரம் வார்த்தைகளாவது பிறருடன் பேசும்போது தான் மனம் லேசாகிறது. 


மன அழுத்தம் காரணமாக சீரான மாத விடாய் சுழற்சியில் சிக்கல், குழந்தை பேறின்மை. முறை தவறும் மெனோபாஸ் என பல பாதிப்புகளும் ஏற்படு கின்றன. அதனால் உடல் எடை அதிகரிப்பு, பசி யின்மை, ஞாபகமறதி, தேவையற்ற கோபம், தவறான பழக்க வழக்கம் உள்ளிட்ட பல்வேறு விரும்பத்தகாத விளைவுகளும் ஏற்படக்கூடும். அழுத்தத்தி லிருந்து எளிதாக விடுபடுவதற்கான சில வழிகள்... 

தனிமையைப் புறந்தள்ளுங்கள் 

தனிமையில் இருக்கும் போது, மனதை கெடுக்கும் எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல், எதிர்காலத்தை வளமாக்கும் நேர்மறை விஷயங் சிந்தியுங்கள். மனதை அமைதிப்படுத்த தியானம், யோகா போன்றவற்றைக் மேற்கொள்ளுங் கள். கண்ணாடி முன் நின்று உங்களிடம் நீங்களே பேசுவதும் ஒரு நல்ல வழியே. 

பிடித்த வேலையைச் செய்யுங்கள் 

அன்றாட கடமைகள் முடிந்த பின்னர், எந்த வேலையைச் செய்தால் மனதுக்கு பிடித்தமாக தோன்றுகிறதோ, அதை செய்யுங்கள். வசதியற்ற குழந்தைகளுக்கு இலவசமாக பாடம் கற்று கொடுப் பது, புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது போன்ற விஷயங்களில் ஈடுபடலாம். பகுதிநேர தொழிலை மேற்கொள்வதால் குடும்ப பொருளாதார நிலை உயர்வதுடன், தேவையற்ற சிந்தனைகளிலிருந்தும் விடுபடலாம். 

ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள் 

எண்ணெய்யில் பொரித்த உணவுகள், சேர்த்த உணவு வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதுடன், மனதையும் பாதிக்கக் கூடும். காய்கறிகள், பழங்கள் போன்ற இயற்கை உணவு வகைகளை உண்பதால் மனமும், உடலும் லேசாக மாறுவதை உணரலாம். 

சூயிங்கம் ருசியுங்கள் 

அழுத்தத்தை உணரும் நிலையில், சிந் தனையை திசை திருப்பவேண்டும். அதற்கு சூயிங் கம் சுவைப்பது துணை புரியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சூயிங்கத்தை நிதானமாக மெல்லு வதால் செயல்படும் தசை இயக்கம் மன இறுக் கத்தை அகற்ற உதவியாக இருக்கும். ஆலோசனை பெறுங்கள் ஆரம்ப நிலையிலேயே மன அழுத்த உணர்வை கண்டறியுங்கள். அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு உள்ளது என்ற அடிப்படையில், தகுந்த நபரிடம் ஆலோசனை பெறலாம். 

பழக்கங்களை மாற்றுங்கள் 

மற்றவர்களை விமர்சனங்கள் செய்வது, மனதை சலனமாக்கும் பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபடுவது ஆகியவற்றை தவிர்த்து, புத்தகங்களை வாசிப்பது, இசை கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம். நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளுடன் நேரத்தைச் செலவிடுவதால் மனம் லேசாகி, அழுத்தம் குறையும்.

No comments:

Post a Comment