மியான்மர் பல்லியின் பெயர்
அரபிக் கடல், வங்காள விரிகுடா கடல் பகுதி
களில் உருவாகும் புயல்களுக்கு இந்தியா,
வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன்,
பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, ஈரான்,
கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீர
கம், ஏமன் உள்ளிட்ட நாடுகள் இணைந்து
பெயர்களை பரிந்துரை செய்கின்றன.
புயலுக்கு பெயர் வைக்கும்போது அரசியல்,
மத நம்பிக்கை இல்லாமல் பொதுவான பெயர்
சூட்ட வேண்டும்.
யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் இருக்கக்
கூடாது. பெயரின் அளவு அதிகபட்சம் 8 எழுத்துகளில் இருக்க வேண்டும்.
ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பெயர்களை மீண்டும் பயன்படுத்தக் கூடாது
என்பன உள்ளிட்ட விதிகள் பின்பற்றப்படுகின்றன.
தற்போது அரபிக் கடலில் உருவான புயலுக்கு டவ் தே' என்று பெயர்
சூட்டப்பட்டுள்ளது. இது மியான்மர் நாடு சூட்டிய பெயர் ஆகும். இது
மியான்மரில் காணப்படும் ஒருவகை பல்லி இனத்தின் பெயர் ஆகும்...
No comments:
Post a Comment