கல்லூரிகளில் 'ஸ்போர்ட்ஸ் கோட்டா' சான்றிதழ்கள் அடிப்படையில் தேர்வு - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, May 8, 2021

கல்லூரிகளில் 'ஸ்போர்ட்ஸ் கோட்டா' சான்றிதழ்கள் அடிப்படையில் தேர்வு

தனியார் கல்லூரிகளில் விளையாட்டு வீரர்களுக்கான, 'ஸ்போர்ட்ஸ் கோட்டா' சேர்க்கை, ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. விருப்பமுடைய வீரர்கள், ஆன்லைனில் முன் பதிவு செய்ய, சில தனியார் கல்லுாரிகள் அழைப்பு விடுத்துள்ளன.


தமிழகத்தில் உள்ள சுயநிதி, தனியார் இன்ஜி., மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பிளஸ் 2, 10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் 'ஸ்போர்ட்ஸ் கோட்டா' அடிப்படையில், தேர்வு நடத்தப்படும். இதன் அடிப்படையில் கல்லுாரியில் படிக்க இடம் வழங்கப்படும்.'ஸ்போர்ட்ஸ் கோட்டா' பிரிவில் சேர சில தனியார் கல்லுாரிகள், ஆன்லைன் முன்பதிவு முறையை அமல்படுத்தியுள்ளனர்.

இதில், மாவட்டம், மண்டலம், மாநிலம், தேசிய, ஆசிய போட்டிகளில் சாதனை படைத்த வீரர்கள், தங்களின்சான்றிதழ்களை, முன் பதிவு செய்து வருகின்றனர். இது குறித்து, தனியார் கல்லுாரியின் உடற்கல்வி இயக்குனர்கள் கூறுகையில், 'கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, வீரர்களின் தனி திறமைகளை கண்டறிய முடியாத நிலை உள்ளது. இதனால் சான்றிதழ் அடிப்படையில் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 

வீரர்கள் ஆன்லைனில் தங்களின் பெயர், பிறந்த தேதி, ஊர், விளையாட்டு விபரம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அனுப்பலாம். பிறகு எந்த போட்டியில் எவ்வளவு பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்கிற தகவல்களை கொண்டு, சமூக இடைவெளியுடன் வீரர்களுக்கான போட்டி தேர்வு நடத்தப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment