சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடந்து வருகிறது. கீழடியில் 4 குழிகள் தோண்டப்பட்டு அகழ்வாராய்ச்சி பணிகள் நடக்கின்றன. இந்த நிலையில் சேதமுற்ற நிலையில் சிறிய பானை கண்டெடுக்கப்பட்டது. அதே போல் மண் பாத்திரம் ஒன்றும் கிடைத்திருக்கிறது..
இந்த மண் பாத்திரம் அதிக எடை கொண்டதாகவும், வட்டமாகவும் காணப்படுகிறது. தண்ணீர் உபயோகத்துக்கு இதனை முற்காலத்தில் பயன்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெறும் போது மேலும் கூடுதலாக பல்வேறு பொருட்கள் கிடைக்கக்கூடும் என தெரிய வருகிறது.
No comments:
Post a Comment