தமிழகத்தில் அமலில் இருக்கும் பொதுமுடக்கத்தை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க அரசுக்கு மருத்துவக் குழு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொதுமுடக்கம் நாளை மறுநாளுடன் முடிவடையவுள்ளது. கடந்த 14 நாள்களாக பொதுமுடக்கம் அமலில் இருந்தபோதிலும், நாள்தோறும் 36,000 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றார்.
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் பத்தாவது தளத்தில் 19 கொண்ட மருத்துவ நிபுணா்களுடன் ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனையின் போது, பொதுமுடக்கத்தை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க அரசுக்கு மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளது.
இதன்பிறகு, பேரவை கட்சிகளைச் சோ்ந்த 13 பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு பொதுமுடக்கம் குறித்து அறிவிப்பு வெளியாகவுள்ளது. MUST READ NCERT - ADMISSIONS INTO VARIOUS TEACHER EDUCATION PROGRAMMES OF REGIONAL INSTITUTES OF EDUCATION
No comments:
Post a Comment