முகத்திற்கு மென்மையும், பொலிவும் தருவ
துடன், சருமத்திற்கும் பல நன்மைகளை
அளிக்கக்கூடியது ரோஜா மலர். அதன் இதழ்களில்
அடங்கியுள்ள வைட்டமின் சி, சருமத்திற்கு அழகை
யும் பாதுகாப்பையும் அளிக்கக்கூடியது. மேனியின்
அழகை பராமரிக்க ரோஜா இதழ்களை பயன்
படுத்தும் முறைகள் பற்றி இங்கே காணலாம்.
ரோஜா இதழ்களை அரைத்து தடவினால், சருமம்
மென்மையாகும். குளியல் பொடியிலும் அரைத்த
ரோஜா இதழ்களை சேர்க்கலாம்.
வெயில் காரணமாக சருமம் பளபளப்பை இழந்து,
எண்ணெய் வடிவதால் முகப்பருக்கள் தோன்று
கின்றன.
இந்த பிரச்சினை அகல, இரு பன்னீர்
ரோஜா பூவின் இதழ்கள், கற்றாழை ஜெல் ஒரு
டீஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து
தடவலாம். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால்
முகத்தை கழுவினால் பருக்களால் ஏற்படும் சரும
பாதிப்புகள் அகலும்.
கருப்பான உதடு கொண்டவர்கள் அரைத்த பன்னீர்
ரோஜா ஒரு டீஸ்பூன், தேன் அரை டீஸ்பூன் கலந்து
உதடுகளின் மேல் பூசி வரலாம்.
அரைத்த பன்னீர் ரோஜா இதழ்கள் மற்றும் தயிர்
ஆகியவற்றை அளவில் கலந்து முகத்தில்
தடவினால், முகத்தில் ஏற்பட்ட கரும்புள்ளிகள்
மறைந்து விடும்
வியர்வை துர்நாற்றம் உள்ளவர்கள் பன்னீர்
ரோஜாவில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீரை
கலந்து குளிக்க துர்நாற்றம் நீங்கி புத்துணர்ச்சி
ஏற்படும்.
வெயில் காலத்தில் முகத்தில் திட்டுத்திட்டாகக்
தோன்றும் கருப்பான பகுதிகளில், ஒரு பன்னீர்
ரோஜா, 5 தாமரை இதழ்கள், ஒரு டீஸ்பூன் கடலை
மாவு, தேவையான அளவு காய்ச்சாத பால் ஆகிய
வற்றை அரைத்து 'பேக்' போல முகத்தில் தடவலாம்.
மேற்கண்ட எளிய பராமரிப்புகளுக்கு நாட்டு பன்னீர்
ரோஜா வகைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
'ஹைப்ரிட்' வகை ரோஜாவைப் பயன்படுத்தக் கூடாது.
பன்னீர் ரோஜா செடிகளை வீட்டு தோட்டத்திலோ
அல்லது தொட்டிகளிலோ வளர்க்கலாம்.
முகத்துக்கு
பொலிவு அளிப்பது மட்டுமின்றி தினமும் ஒரு
பன்னீர் ரோஜாப்பூ இதழ்களை சாப்பிட்டு வந்தால்
வயிற்றில் உள்ள புண்கள் ஆறிவிடும்.
இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் நோய்
எதிர்ப்பு சக்தியை அளிப்பதுடன், உடலின் வெப்
பத்தை சீராக்கும். அதன் துவர்ப்புச் சுவை ரத்த
விருத்திக்கு ஏற்றதாகவும், வயிற்றிலுள்ள வாயுக்
களை அகற்றும் குணம் கொண்டதாகவும் உள்ளது.
குளிர்ச்சியை அளித்து, இதயத்தை வலுப்படுத்து
கிறது. கர்ப்பப்பையில் உருவாகும் ரத்தபோக்கை
கட்டுப்படுத்தும் குணமும், மலத்தை இளக்கும்
தன்மையும்
கொண்டது.
சீதபேதியைக் குணப்
படுத்துவதுடன், அதிக நாட்கள் மாதவிடாய்
தொல்லை இருப்பவர்களுக்கு அருமையான மருந்
தாகவும் பன்னீர் ரோஜா செயல்படுகிறது.
No comments:
Post a Comment