சுற்றுச்சூழல் பாதுகாப்பு:
இணையவழியில் கட்டுரைப் போட்டி
உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்
னிட்டு, சேலம், தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி
சார்பில் நவீனமயமாக்கலும், சுற்றுச்சூழல் பாதுகாப்
பும் என்ற தலைப்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்
கான கட்டுரைப் போட்டி இணையவழியில் நடத்தப்ப
டுகிறது.
இப்போட்டியில் 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ்
2 வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்க
லாம். மாணவர்கள் தங்கள் கட்டுரைகளை ஏ4 தா
ளில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல், தமிழிலோ
அல்லது ஆங்கிலத்திலோ எழுதி ஆன்லைனில்
http://bit.ly/3wBC "என்ற கூகுள் படிவ இணைப்பு
மூலமாகவோ (அல்லது) tptwin2021@gmail.com
என்றமின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9443552179
(தமிழ்), 9865552934 (ஆங்கிலம்) என்ற கட்செவி
அஞ்சல் எண்களுக்கு ஜூன் 3 ஆம் தேதி மாலை 5
மணிக்குள் அனுப்பிவைக்கலாம்.
ஜூன் 5 ஆம் தேதி ஆன்லைனில் நடைபெற
வுள்ள உலக சுற்றுச்சூழல் தினக் கொண்டாட்டங்க
ளின் போது, தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகளுக்கு
முதல் பரிசு ரூ.2,000, இரண்டாம் பரிசு ரூ.1,500, மூன்
றாம் பரிசு ரூ.1,000 மற்றும் ஆறுதல் பரிசுகள் ரூ.750
(நான்கு மாணவர்களுக்கு) வழங்கப்படும்.
பொது முடக்கக் காலத்தில் மாணவ, மாணவி
யர் தங்களின் திறமைகளை வெளிக் கொணரவும்,
எழுத்துத் திறனை ஊக்குவிக்கவும், அற்புதமான பரி
சுகளை வெல்லவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்
திக் கொள்ளலாம் என தியாகராஜர் பாலிடெக்னிக்
கல்லூரி முதல்வர் வீ.கார்த்திகேயன் தெரிவித்துள்
ளார்.
No comments:
Post a Comment