‘இ-பதிவு' செய்வது எப்படி? - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, May 17, 2021

‘இ-பதிவு' செய்வது எப்படி?


‘இ-பதிவு' செய்வது எப்படி? ரெயில் பயணிகளுக்கு புதிய நடைமுறை 

'இ-பதிவு' செய்வதற்கு தமிழக அரசின் http://eregister.tnega.org என்ற இணையதளத்துக்குள் நுழைய வேண்டும். அதில் தங்களுடைய செல்போன் எண்ணை குறிப்பிட வேண்டும். 


அருகில் ‘கேப்ட்சா' எண் இருக்கும். அதனை பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் மூலம் ஓ.டி.பி. எண் வரும். இந்த எண்ணை பதிவு செய்தால் ‘இ-பதிவு' காலம் திறக்கும். அதில் பயண தேதி, பயணம் செய்பவர்களின் பெயர், வாகன எண், எங்கிருந்து எங்கே பயணம், எதற்காக பயணம் ஆகிய விவரங்களை குறிப்பிட வேண்டும். 


பயணம் செய்வதற்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் (உதாரணம், திருமணத்துக்கு செல்ல வேண்டும் என்றால் திருமண பத்திரிகையை அளிக்க வேண்டும்). ஆதார், ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட் ஆகிய 5 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளிக்க வேண்டும். 


அதன்பின்னர் பயணம் செய்வதற்கு அனுமதி கிடைக்கும். ரெயில் மூலம் வரும் பயணிகள் ரெயில் டிக்கெட் நகல், ரெயில் எண், பெட்டி, புறப்படும்- வந்து சேரும் இடம் மற்றும் 5 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளிக்க வேண்டும். ரெயில் நிலையம் வருவதற்கு மட்டுமே இந்த பாஸ் செல்லுபடியாகும் என்றும், ரெயில் நிலையத்தில் இருந்து அவர்கள் புறப்பட்டு செல்லும் இடங்களுக்கு வாகனத்தின் விவரங்களை குறிப்பிட்டு இந்த பாசை புதுப்பிக்க வேண்டும் என்றும் இ-பதிவு இணையதளத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment