அறிவியல் அறிவோம் : N95 Mask கண்டுபிடித்தது யார்? - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, May 21, 2021

அறிவியல் அறிவோம் : N95 Mask கண்டுபிடித்தது யார்?

N95 Mask கண்டுபிடித்தது யார்? #அறிவியல்_அறிவோம்!!! #thulirkalvi #N95Mask 


கண்ணுக்கு தெரியாத நுட்பமான கிறுமிகள் ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு பரவாமல் இருப்பதற்கு N95 mask பயன்படுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்த பெருந்தொற்று காலமான கொரோனா வைரஸ் பரவக்கூடிய சூழலில் அனைத்து மருத்துவர்களும் நோய் பரவாமல் இருப்பதற்கு பரிந்துரை செய்வது N95 mask தான். 

ஆனால், இன்று மக்கள் நோய்க்கு அஞ்சு மாஸ்க் போடலாம் காவல்துறைக்கு அஞ்சு வெறும் 10 ரூபாயில் கிடைக்கக் கூடிய சாதாரண துணிகளால் ஆன சாலை ஓரங்களில் கிடைக்கக்கூடிய முகமூடிகளை பயன்படுத்துகின்றனர். இது ஒரு காலமும் நோய் பரவுவதை தடுக்காது. N95 Mask கண்டுபிடித்தது யார்? தைவானிய அமெரிக்க விஞ்ஞானியான சாய் 1995 ஆம் ஆண்டு N95 முகமூடியை கண்டுபிடித்தார். 

முதன் முதலில் N95 முகமூடிகள் செயற்கை இழைகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. அதுதான் இன்று Covid-19 பரவுவதை தடுக்க மிகச்சிறந்த தடையாக கருதப்படுகிறது. 

கண்டுபிடிக்கப்பட்டது ஏன்? 

கொரோனா வைரஸ் தூண்டப்பட்ட போது N95 முகமூடியை கண்டுபிடித்த பெருமை பெற்றவர் பீட்டர் சாய். (PETER TSAI) இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஓய்வில் இருந்தார். N95 கவசத்தை கண்டுபிடித்து அதற்கான காரணத்தை குறிப்பிடுகையில் "நான் தேவை என்று உணர்ந்தேன் நான் சுகாதார ஊழியர்களுக்கு உதவ வேண்டும் என்று விரும்பினேன்." அமெரிக்க மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முகமூடிகள் மற்றும் பிற பிபிஇ(PPE) க்கான வினியோக பற்றாக்குறையை எதிர்கொள்கிறார்கள் என்று கேள்விப்பட்டதை தொடர்ந்து நான் மீண்டும் சேவைக்கு திரும்பியதாக குறிப்பிட்டார். 

அடுத்த கட்ட நகர்வு என்ன? 

ஓய்வு பெற்றதிலிருந்து சாய் நாக்ஸ்வில்லின் ஆராய்ச்சி அறக்கட்டளையின் டெனசி பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார் அவர் தற்போது முகமூடிகளை செய்ய புதிய முறைகளை சோதித்து வருகின்றார். சாதாரண முக கவசத்திற்கும் N95 முக கவசத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? பிற முகக் கவசம் அறுவை சிகிச்சையின் போது சுகாதார வல்லுநர்களால் அணியப்பட வேண்டும். சிகிச்சையின் பொழுது நோயாளிகளுக்கு மருத்துவ துறையினரின் வாய், மூக்கு போன்ற உறுப்புகளிடமிருந்து வெளிவரும் திரவ துளிகள் மற்றும் சுற்றுப்புற வளிமண்டலத்தில்(ஆங்:aerosol) வெளிவிடப்படும் பாக்டீரியாக்களைப் தடுக்க உதவுகின்றது. அறுவைசார் முகக்கவசமானது அணிந்திருப்பவரை காற்றின் வழி பரவும் பாக்டீரியா அல்லது வைரஸ் துகள்களை உள்ளிழுப்பதில் இருந்து பாதுகாக்க வடிவமைக்கப்படவில்லை, மேலும் இவை N95 முகக் கவசத்தை போன்ற சுவாசக் கருவிகளைக் காட்டிலும் குறைவான செயல்திறன் கொண்டவை. 

ஆனால் N95 அல்லது FFP போன்றவை அவற்றின் பொருள், வடிவம் மற்றும் இறுக்கமான முத்திரை காரணமாக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன. முகமூடி பயன்படுத்துவோருக்கான அவரது அறிவுரை..! இருப்பினும், மக்கள் ஏழு N95 முகமூடிகளை வாங்க வேண்டும் மற்றும் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒன்றைப் பயன்படுத்த வேண்டும் என்று சாய் பரிந்துரைக்கிறார், பயன்படுத்திய பிறகு அவர்கள் முகக் கவசத்தை தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் ஏழு நாட்கள் வைக்க வேண்டும். குடிமக்கள் N95 முகக் கவசத்தை வாங்க முடியாவிட்டாலும் கூட அவர்கள் பொதுவில் பயன்படுத்திய முகக் கவசத்தை அணியக்கூடாது என்று சாய் கூறினார். "சிலர், 'எனக்கு கவலையில்லை, நான் முகமூடி அணியத் தேவையில்லை' என்று கூறினார். "இது மிகவும் சுயநலமானது, ஏனென்றால் நீங்கள் உங்கள் கிருமிகளை மற்றவர்களிடம் வெளிப்படுத்துகிறீர்கள் என்று குறிப்பிட்டார். எனவே முக கவசம் உயிர்க்கவசம் என்பதை உணர்ந்து செயல்படுவோம்..

No comments:

Post a Comment