தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
செய்தி வெளியீடு
எண்: 18/2021
நாள்: 12.05.2021
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 2020ஆம்
ஆண்டு டிசம்பர் திங்களில் நடத்தப்பட்ட துறை தேர்வுகளில் 129
தேர்வுகளின் முடிவுகளும், எந்தெந்த தேர்வுகளின் முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளன என்ற பட்டியலும் 08.05.2021
அன்று
தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
அப்பட்டியலில் 14 தேர்வுகளைத் தவிர மற்ற அனைத்து துறைத்
தேர்வுகளும் இடம்பெற்றுள்ளன.
கொரோனா பெரும் தொற்று காரணத்தால் தமிழக அரசால்
ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 14
தேர்வுகளின் முடிவுகள் 08.06.2021 அன்று வெளியிடப்படும்.
மேலும், இத்தேர்வுகள் எழுத விழையும் தேர்வர்களின்
நலனை கருத்தில் கொண்டு, மே 2021 துறைத் தேர்வுகளுக்கு
இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி, 15.06.2021
வரை நீட்டிக்கப்படுகிறது.
இரா. சுதன், இ.ஆ.ப.,
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்.
No comments:
Post a Comment