டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட துறை சார்ந்த தேர்வு முடிவுகள் வெளியீடு TNPSC அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, May 13, 2021

டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட துறை சார்ந்த தேர்வு முடிவுகள் வெளியீடு TNPSC அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட துறை தேர்வுகளில் 129 தேர்வுகளின் முடிவுகளும், எந்தெந்த தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என்ற பட்டியலும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கின்றன. 
MUST READ 
அந்த பட்டியலில் 14 தேர்வுகளை தவிர மற்ற அனைத்து துறைத் தேர்வுகளும் இடம்பெற்று உள்ளன. கொரோனா பெருந்தொற்று காரணத்தால் தமிழக அரசால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீதம் உள்ள 14 தேர்வுகளின் முடிவுகள் அடுத்த மாதம் (ஜூன்) 8-ந் தேதி அன்று வெளியிடப்படும். 
MUST READ 
மேலும் இந்த தேர்வுகள் எழுத விரும்பும் தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டு, மே 2021 துறைத் தேர்வுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வருகிற 15-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment