மாநகராட்சியில் பணிபுரிய
100 செவிலியருக்கு அழைப்பு
மாதம் ரூ.12 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்ப
டையில், கொரோனா தொற்று பரவல் தடுப்பு
பணியில் ஈடுபட, செவிலியர்களுக்கு,
கோவை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.
கோவை மாநகராட்சி பகுதியில், கொரோனா
பரவல் தடுப்பு பணியில் ஈடுபடவும், சிறப்பு
சிகிச்சை மையங்களிலும் பணியாற்றவும் கூடுத
லாக டாக்டர்கள், செவிலியர் தேவைப்படுகின்ற
னர். மாதம் ரூ.60 ஆயிரம் தொகுப்பூதியத்தில்,
25 டாக்டர்களை மாநகராட்சி நியமித்தது.
அதேபோல், ரூ.12 ஆயிரம் சம்பளத்தில்,
100 செவிலியர்கள் நியமிக்க முடிவு செய்யப்
பட்டுள்ளது.
குறைந்தபட்சமாக, பி.எஸ்.சி., நர்சிங் அல்லது
டிப்ளமோ நர்சிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தொகுப்பூதியத்தில் மூன்று மாதத்துக்கு தற்காலி
கமாக நியமிக்கப்படுவர்.
விருப்பமுள்ளவர்கள், கல்வி சான்று, இருப்
பிட சான்று, ஜாதிச்சான்று, ஆதார் அட்டை
ஒரிஜனல் மற்றும் ஒரு செட் நகல் சான்றுகளு
டன், நாளை (3ம் தேதி) காலை, 10:00 மணிக்கு,
கோவை, டவுன்ஹாலில் உள்ள மாநகராட்சி
பிரதான அலுவலகத்தில் நடக்கும் நேர்காண
லில் பங்கேற்க வேண்டும் என, மாநகராட்சி
கமிஷனர் குமாரவேல் பாண்டியன் அழைப்பு
விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment