விளையாட்டு வீரர்களுக்கு முதல்-அமைச்சர் மாநில விருது விண்ணப்பிக்க அடுத்த மாதம் 15-ந்தேதி கடைசி நாள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, June 24, 2021

விளையாட்டு வீரர்களுக்கு முதல்-அமைச்சர் மாநில விருது விண்ணப்பிக்க அடுத்த மாதம் 15-ந்தேதி கடைசி நாள்

விளையாட்டு வீரர்களுக்கு முதல்-அமைச்சர் மாநில விருது விண்ணப்பிக்க அடுத்த மாதம் 15-ந்தேதி கடைசி நாள் விளையாட்டு வீரர்களுக்கு முதல்-அமைச்சர் மாநில விருது வழங்கப்படுகிறது. 


இதற்காக விண்ணப்பிக்க அடுத்த மாதம் 15-ந் தேதி கடைசி நாளாகும். விருது ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுனர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குனர் அல்லது உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருது வழங்கப்படுகிறது. 

இந்த விருது பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் ரூ.10,000 மதிப்பிலான தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் ஆகியவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை வழங்கி வருகிறது. விண்ணப்பிக்கலாம் அதன்படி 2020-21-ம் நிதி ஆண்டுக்கான இந்த விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருது ஆண்டுக்கு முந்தைய 3 ஆண்டுகள் விளையாட்டில் சாதனை படைத்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். 

 இது தவிர விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துனர் அல்லது ஒரு நிர்வாகி அல்லது ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் நன்கொடையாளர், ஒரு ஆட்ட நடுவர், ஆட்டத்தின் முடிவை அறிவிப்பவர் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுகளுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை முதன்மை செயலாளர் அல்லது உறுப்பினர் செயலாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

கடைசி நாள் முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பப்படிவம் மற்றும் விரிவான விதிமுறைகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தளம் மூலம் www.sdat.tn.gov.in பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உறையின் மேல் முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம் என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை அலுவலகத்திற்கு அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதிக்குள் செல்லுமாறு அனுப்பி வைக்க வேண்டும். இது குறித்து மேலும் விவரங்களுக்கு கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலரை தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment