17 வயதில் எம்.டெக்., பி.ஹெச்.டி.,
╰•★★ Join Our WhatsApp ★★•╯
சென்னையை அடுத்த வண்டலூர் பி.எஸ். அப்துர்
ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் 17 வயதில் எம்.சி.ஏ.
முதுகலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள அறிவாற்றல்
மிக்க இளம் மேதாவி மாணவர் கோவை ராமநாதபுரத்தை
சேர்ந்த பி. முஹம்மது ஸுஹைல் எம்.டெக்., பி.ஹெச்.டி.
ஆய்வுப் படிப்புக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழக
துணைவேந்தர் ஜெ.ஏ.கே.தரீண், பி.முஹம்மது
ஸுஹைலிடம் மாணவர் சேர்க்கைக்கான உத்தரவை
வழங்கினார்.
மாணவர் பி.முஹம்மது ஸுஹைல் பேசும்போது, கோயம்புத்தூர் கார்மல்
கார்டன் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தபோது மேஸ்நெட் நிறுவனத்தில்
| பகுதி நேர கம்ப்யூட்டர் படிப்பில் சேர்ந்து படித்தேன். 8வது படிக்கும்போதே 15
வகை கம்ப்யூட்டர் டிப்ளமோ சான்றிதழ் படிப்புகளை நிறைவு செய்து விட்டேன்.
பின்னர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்விப் படிப்பு எம்.சி.ஏ.
பயில விண்ணப்பித்தேன். பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவினர் 20 பேர்
கொண்ட குழுவினர் என் திறமையை நேர்காணலின் போது பரிசோதனை செய்து,
| என் திறமையின் அடிப்படையில் எம்.சி.ஏ. படிக்க அனுமதித்தனர். தற்போது
எம்.சி.ஏ. தேர்வில் முதல் வகுப்பில் தேறி 78.5 மதிப்பெண் பெற்றுள்ளேன்
| என்றார்.
இவர் தன்னுடைய 14வது வயதிலேயே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பல
சான்றிதழ்களை பெற்று எம்.சி.ஏ படிப்பை தனது சிறு வயதிலேயே துவங்கி
சாதனை படைத்துள்ளார்.
9ம் வகுப்பு முடித்த முஹம்மது சுஹைலின் அறிவுத்
திறனை கண்டு பாரதியார் பல்கலைக்கழகம் இவருக்காக வயது வரம்பை
தளர்த்தியது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment