விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
ந.க.எண். 186 / ஆ4/ 2021, நாள். 19.06.2021
பொருள்-
பள்ளிக் கல்வி - விழுப்புரம் மாவட்டம் - அனைத்து வகை
பள்ளிகள் - 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களின்
தந்தை / தாய் (அல்லது) இருவருமோ கொரானா தொற்றின் (Covid -19)
காரணமாக காலமான - பெற்றோர்கள் விவரம் கோருதல் --சார்பு.
பார்வை-
சென்னை-6. தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களால் அனைத்து
முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான இணைய வழிக் கூட்டத்தில்
வழங்கப்பட்ட அறிவுரைகள்
நாள்-16.06.2021.
2021-2022 ஆம் கல்வி ஆண்டு விழுப்புரம் மாவட்டம் அனைத்து வகை பள்ளிகள்
1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களின் தந்தை / தாய் (அல்லது ) இருவருமோ
கொரானா தொற்றின் (Covid -19) காரணமாக காலமான பெற்றோர்கள் விவரத்தினை தலைமை
ஆசிரியர்களிடமிருந்து கோரி பெற்று அனுப்பி வைத்திடுமாறு மதிப்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வி
ஆணையர் அவர்களால் நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்கள்.
எனவே அதன்
அடிப்படையில் அனைத்து வகை பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும்
மாணவ/மாணவியர்களின் தந்தை / தாய் (அல்லது ) இருவருமோ கொரானா தொற்றின் (Covid -19 )
காரணமாக காலமான பெற்றோர்களின் விவரத்தினை இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து
23.06.2021 -க்குள் மணிக்குள் சம்மந்தப்பட்ட மாவட்டக் கல்வி
அலுவலகத்திற்கு அனுப்பி
வைத்திடுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஒன்றியம் சார்பாக அறிக்கையினை
சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் உரிய தேதியில் ஒப்படைத்திடுமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment