மாணவர்களுக்கு மேற்படிப்பு வழிகாட்டும் கருத்தரங்கம் 1-ந்தேதி தொடங்குகிறது - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, June 27, 2021

மாணவர்களுக்கு மேற்படிப்பு வழிகாட்டும் கருத்தரங்கம் 1-ந்தேதி தொடங்குகிறது

‘தினத்தந்தி’-ஆதித்தனார் கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கும் மாணவர்களுக்கு மேற்படிப்பு வழிகாட்டும் கருத்தரங்கம் வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது. 


கருத்தரங்கம் ‘தினத்தந்தி’-ஆதித்தனார் கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கும் ‘மேற்படிப்பு வழிகாட்டும் கருத்தரங்கம் 2021' வருகிற 1-ந் தேதி (வியாழக்கிழமை) தொடங்கி 3-ந் தேதி வரை நடக்கிறது. இந்த கருத்தரங்கத்தில் என்ஜினீயரிங், மருத்துவம், கலை-அறிவியல், கல்வியியல், உடற்கல்வியியல், ஆசிரியர் பயிற்சி போன்ற பல்வேறு துறைகளில் மேற்படிப்புக்கான வழிகாட்டல்களை கல்வியாளர்களும், பேராசிரியர்களும் வழங்குகிறார்கள். 


இந்த கருத்தரங்கம் இணையவழி காெணாலி மூலமாக நடத்தப்படுகிறது. பிளஸ்-2 மாணவர்கள், பட்டதாரிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து ெகாள்ளலாம். இதில் பங்கேற்க எந்தவித கட்டணமும் கிடையாது. இந்த இலவச கருத்தரங்கை கணினி மற்றும் செல்போனிலும் பார்த்து மேற்படிப்புக்கான அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். 


துறை வாரியாக... இந்த கருத்தரங்கம் வருகிற 1-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணி முதல் 11.30 மணிவரை என்ஜினீயரிங் துறைக்கும், 11.30 மணி முதல் 12.30 மணி வரை கலை மற்றும் அறிவியல் துறைக்கும் நடக்கிறது. 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை மருத்துவம், 11.30 மணி முதல் 12.30 மணி வரை கலை மற்றும் அறிவியல் துறைக்கு நடைபெறுகிறது. 3-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணி முதல் 11.15 மணி வரை கல்வியியல் துறை, 11.15 மணி முதல் 12 மணி வரை உடற்கல்வியியல் துறை, 12 மணி முதல் 12.45 மணி வரை ஆசிரியர் பயிற்சி குறித்தும் கருத்தரங்கம் நடக்கின்றது. 

முன்பதிவு இந்த கருத்தரங்கத்தில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் தங்களது பெயரை வருகிற 30-ந் தேதிக்குள் (புதன்கிழமை) முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு செய்ய விரும்புவோர் https://forms.gle/SNe4Ybc4pzhxQUTt7 ‘லிங்’கை பயன்படுத்தி ‘கூகுள்’ விண்ணப்ப (Google Form) படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பித்தவர்களுக்கு இ-மெயில் மற்றும் குறுஞ்செய்தி மூலம் இணைய கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள அனுமதி மற்றும் ‘யூடியூப் லிங்க்’ வழங்கப்படும். 

இந்த கருத்தரங்கத்தினை மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ‘யூடியூப்’ மூலமாக கண்டு பயன்பெறலாம். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 04639-245110, 220590, 9443453030, 9843329751 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment