தினமும் 20 முறைக்கு மேல் கதவின் ரகசிய எண்ணை போட்டு வீட்டில் நுழையும் புத்திசாலி பூனை - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, June 9, 2021

தினமும் 20 முறைக்கு மேல் கதவின் ரகசிய எண்ணை போட்டு வீட்டில் நுழையும் புத்திசாலி பூனை

தென் கொரியாவில் தெருவில் சுற்றித் திரிந்த பூனை ஒன்று, வீட்டு கதவை திறப்பதற்கான ரகசிய எண்களை போட்டு உள்ளே நுழையும் வீடியோ வைரலாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 


பூனைகள் மிகவும் புத்திசாலிகள். உருவம் சிறிது என்றாலும் புலிகளுக்கு நிகரான திறமை பெற்றவை. வழக்கமாக, பூனைகள் வீடுகளுக்குள் ஜன்னல் வழியாகவோ, திறந்திருக்கும் முன்பக்க, பின்பக்க கதவுகள் வழியாகவோ சமையலறைக்குள் நுழைவதைதான் பார்த்திருக்கிறோம். 

ஆனால், தென் கொரியாவில் தெருப்பூனை ஒன்று செய்யும் காரியம் மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உணவு கிடைக்காத நேரத்தில் இந்த பூனை, அங்குள்ள வீட்டுக்கு செல்கிறது. வீட்டின் கதவை திறப்பதற்கு ரகசிய எண்கள் கொண்ட டோர்்லாக் கருவி உள்ளது. 

அந்த ரகசிய எண்களை பூனை எப்படிதான் தெரிந்து கொண்டது என்று தெரியவில்லை. தினமும் 20 முறையாவது அந்த வீட்டுக்கு செல்லும் பூனை, அழகாக தனது காலால் டோர்லாக் கருவில் உள்ள ரகசிய எண்களை அழுத்துகிறது. கதவு திறந்ததும் உள்ளே சென்று, வேண்டியதை சாப்பிட்டு விட்டு செல்கிறது. வீட்டின் உரிமையாளர் விரட்டியடித்த போதிலும், மீண்டும் மீண்டும் அதேபோல் செய்கிறது. 

ஒரு கட்டத்தில், ரகசிய எண்களை பூனை அழுத்துவதை தடுப்பதற்காக, டோர்லாக் கருவின் மீது லேமினேஷன் அட்டையை உரிமையாளர் பொருத்தினார். அதையும் நகங்களால் கிழித்து விட்டது. முதலில் கோபப்பட்ட வீட்டின் உரிமையாளர் மனைவி, பின்னர் பூனையின் புத்திசாலித்தனத்தை பார்த்து அதன் மீது அன்பு செலுத்தினார். இப்போது, இந்த பூனையை சட்டப்படி தத்தெடுத்து, ‘டவே பர்ன்’ என்று பெயரும் சூட்டியுள்ளார்.

No comments:

Post a Comment