கோவை மாநகராட்சியில், தொற்று பரவல் தடுப்பு பணிக்காக, தொகுப்பூதிய அடிப்படையில், புதிதாக, 25 டாக்டர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்கான உத்தரவை, தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா பரவல் தடுப்பு பணி, தொற்று பாதித்தோருக்கு சிகிச்சை மேற்கொள்தல், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு வரும், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தற்காலிக சிறப்பு சிகிச்சை மையங்களில் பணிபுரிய, மாதம் ரூ.60 ஆயிரம் என தொகுப்பூதியத்தில், மூன்று மாதத்துக்கு பணிபுரிய, 25 டாக்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
நேர்காணலுக்கு, 34 டாக்டர்கள் வந்திருந்தனர். மாநகராட்சி உதவி கமிஷனர் (நிர்வாகம்) செந்தில்குமார் ரத்தினம், நேர்காணல் நடத்தி அவர்களது சான்றிதழை ஆய்வு செய்து, தகுதியானவர்களை தேர்ந்தெடுத்தார். அவர்களுக்கு, அரசு விருந்தினர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பணி நியமன உத்தரவை நேற்று வழங்கினார்.கண்காணிப்பு அலுவலரான, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவ ராவ், மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன், நகர் நல அலுவலர் ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment