''கடந்த ஆட்சியில் லேப்டாப் கிடைக்காத, 2 லட்சம் மாணவர்களுக்கு டேப்லெட் வழங்கப்படும்,'' என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
திருச்சியில் இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
╰•★★ HEALTH TIPS CLICK HERE ★★•╯
எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் ப்ளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் வழங்குவதா அல்லது தேர்வு நடத்துவதா என்று முதல்வரிடம் ஆலோனை நடத்தி, விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும். ப்ளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக ஆலோனைகள் வருகின்றன.
அவற்றின் அடிப்படையிலும், சி.பி.எஸ்.பி., மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்ப்படுகிறது என்பதை ஆராய்ந்தும், அனைத்து தரப்பு மாணவர்களையும் திருப்திபடுத்தும் வகையில் மதிப்பெண் வழங்கப்படும்.
தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தாக்கம் குறைந்து வருவதைப் பொறுத்து, பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
கடந்த ஆட்சியில், 2 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை. அந்த மாணவர்களுக்கு டேப்லெட் வழங்கப்படும். கல்வி உரிமை சட்டத்தில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மீது கடந்த ஆட்சியில் பாகுபாடு காட்டப்பட்டது.
இனி அந்த மாணவர்களிடம் பாகுபாட காட்டக்கூடாது என்பதற்காக, அந்த மாணவர்களுக்கான கல்வி நிலுவைத்தொகையை உடனடியாக விடுவிக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
No comments:
Post a Comment