பிளஸ் 2 மதிப்பெண் எப்படி? கமிட்டி அமைத்தது - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, June 6, 2021

பிளஸ் 2 மதிப்பெண் எப்படி? கமிட்டி அமைத்தது

பிளஸ் 2 மதிப்பெண் எப்படி? கமிட்டி அமைத்தது 


சி.பி.எஸ்.இ., புதுடில்லி, ஜூன் 5- சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கும் முறை குறித்து முடிவெ டுக்க, 13 உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவல் காரண மாக, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடை நிலை கல்வி வாரியத்தின் பிளஸ் 2 பொதுத் தேர் வுகளை, மத்திய அரசு ரத்து செய்தது. 

MOST READ




பல்வேறு மாநிலங்களிலும், கொரோனா தொற்று பரவல் தீவிரமாக உள்ள நிலையில், மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு கருதி, பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக, பிரதமர் மோடி அறிவித்தார். சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து ஆலோ சனை நடத்த, மத்திய கல்வி அமைச்சகத்தின் இணை செயலர் விபின் குமார் தலைமையில், 13 பேர் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. 

எந்த முறையில் மதிப்பெண் வழங்க வேண் டும் என்பது குறித்து, 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க, கமிட்டிக்கு சி.பி.எஸ்.இ., உத்தரவிட் டுள்ளது.

No comments:

Post a Comment