ஸ்டேட் வங்கியில் மாதம் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15 கட்டணம் நாளை முதல் அமலுக்கு வருகிறது - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, June 30, 2021

ஸ்டேட் வங்கியில் மாதம் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15 கட்டணம் நாளை முதல் அமலுக்கு வருகிறது

சேமிப்பு வங்கி கணக்குதாரர்கள் மாதம் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15 கட்டணம் விதிக்கப்படும். நாளை (வியாழக்கிழமை) முதல் இது அமலுக்கு வருகிறது என்று ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. ரூ.15 முதல் ரூ.75 வரை கட்டணம் நாட்டின் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம் வருமாறு:-

 அடிப்படை சேமிப்பு வங்கி கணக்குதாரர்களுக்கான கூடுதல் மதிப்புக்கூட்டிய சேவைகளுக்கான கட்டணங்களில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் நாளை (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி, ரூ.15 முதல் ரூ.75 வரை கட்டணங்கள் விதிக்கப்படும். மாதத்தில் 4 இலவச பரிமாற்றங்களைத் தாண்டி பணம் எடுக்கும் சேமிப்பு வங்கி கணக்குதாரர்களுக்கு கட்டணம் விதிக்கப்படும். நான்கு முறை தாண்டி வங்கி அல்லது ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கும்போது, ஒவ்வொரு முறைக்கும் ஜி.எஸ்.டி.யுடன் ரூ.15 கட்டணமாக வசூலிக்கப்படும். 

 செக் புத்தகம் சேமிப்பு வங்கி கணக்குதாரர்கள், வங்கி மற்றும் ஏ.டி.எம்.கள், பணம் போடும் எந்திரங்களில் மேற்கொள்ளும் பணமல்லாத பரிமாற்றங்கள் உள்ளிட்ட சேவைகள் இலவசமாக வழங்கப்படும். இந்த வாடிக்கையாளர்கள், ஒரு நிதியாண்டில் 10-க்கு மேல் பயன்படுத்தும் செக் இதழ்களுக்கும் கட்டணம் உண்டு. 10 இதழ்களுக்கு மேல், 10 இதழ்கள் கொண்ட செக் புத்தகத்துக்கு ரூ.40, 25 இதழ் செக் புத்தகத்துக்கு ரூ.75, அவசர செக் புத்தகத்துக்கு ரூ.50 கட்டணம். இவற்றுடன், ஜி.எஸ்.டி.யும் உண்டு. ஆனால் மூத்த குடிமக்களுக்கு செக் புத்தக சேவைகளுக்கு கட்டணம் இல்லை. இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.300 கோடி வருவாய் மும்பை ஐ.ஐ.டி. இந்த ஆண்டு ஏப்ரலில் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி, கடந்த 2015-20 காலகட்டத்தில் தனது சுமார் 12 கோடி சேமிப்பு வங்கி கணக்குதாரர்களிடம் பல்வேறு சேவைக் கட்டணங்கள் மூலம் ஸ்டேட் வங்கி ரூ.300 கோடி ஈட்டியுள்ளது. 

நான்கு முறைக்கு மேல் பணம் எடுக்கும்போதெல்லாம் ரூ.17.70 கட்டணம் விதிப்பது நியாயமனதல்ல என்று அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. நாட்டின் 2-வது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியும் சேவைக் கட்டணங்கள் மூலம் குறிப்பிட்ட காலகட்டத்தில் ரூ.9.9 கோடி வருவாய் பெற்றுள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல் சேமிப்பு வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவைகளுக்கு கட்டணம் விதிப்பது தொடர்பாக ரிசர்வ் வங்கி கடந்த 2013-ம் ஆண்டு வழிகாட்டுதல்களை வழங்கியது. அதன்படி இந்த வாடிக்கையாளர்கள், வங்கி முடிவெடுத்து அறிவித்தால் 4 முறைக்கு மேலும் கட்டணமின்றி பணம் எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment