╰•★★ Join Our WhatsApp ★★•╯
குஜராத்தின் வதோதராவில் வசிக்கும் 67 வயது பெண், 50 ஆண்டுகளுக்கு பின் படிப்பை தொடர்ந்து தன் நீண்ட நாள் கனவான முனைவர் பட்டத்தை பெற்றுள்ளார்.
குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்த உஷா லோதயா 67 முதுமையை ஒரு பொருட்டாக கருதாமல் தன் 50 ஆண்டு கனவான முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
இது குறித்து உஷா லோதயா கூறியதாவது: மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த எனக்கு 7 வயதிலேயே முனைவர் பட்டம் பெற வேண்டும் என ஆசை இருந்தது. திருமண நிச்சயதார்த்தம் 16 வயதில் நடந்த பின் கல்லுாரியில் பி.எஸ்சி. சேர்ந்தேன். ஆனால் 20 வயதில் திருமணம் நடந்ததால் படிப்பை கைவிட்டேன்.
திருமணத்திற்கு பின் குடும்பத்தை கவனித்ததால் படிப்பை மறந்தேன். மீண்டும் கல்வியை தொடர விரும்பி ஒன்பது ஆண்டுகளுக்கு முன் மஹாராஷ்டிராவின் ஜல்கானில் உள்ள சத்ருஞ்சய் அகாடமியில் பட்டம் பெற்றேன். பின் சமண மதத்தில் முதுகலை பட்டம் பெற்றேன். நான்கு ஆண்டுகளுக்கு முன் மும்பை கல்லுாரி பேராசிரியரின் வழிகாட்டுதலின்படி சத்ருஞ்சய் அகாடமியில் ஆராய்ச்சி படிப்புக்கு பதிவு செய்தேன்.
'மதம் போதித்த சமாதான கொள்கைகள்' தலைப்பில் ஆய்வுகளை துவங்கினேன்.
அதற்கான வழிகாட்டுதல்களை ஆன்லைன் வாயிலாக பெறுவது கடினமாக இருந்தது.இதற்கிடையே என் கணவர் மரணம் அடைந்தார். வேதனைகளுக்கு நடுவிலும் ஆய்வினை முடித்து தற்போது பிஎச்.டி. முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். இதன் வாயிலாக கனவு நிறைவேறிய மகிழ்ச்சி கிடைத்துள்ளது; மாணவர்களுக்கு கற்பிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment