மருத்துவ தொழில்நுட்ப பணிக்கு இலவச பயிற்சி கலெக்டர் தகவல் - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, June 1, 2021

மருத்துவ தொழில்நுட்ப பணிக்கு இலவச பயிற்சி கலெக்டர் தகவல்


மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைப்பு அமைச்சகத்தின் பிரதமர் கிசான் விகாஸ் யோஜனா என்ற பயிற்சி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் சார்பில் கோவிட்-19 தொடர்பாக வேலை வாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. 

அதன்படி அவசர மருத்துவ தொழில்நிபுணர், மருத்துவ உதவியாளர்கள், மருத்துவ உபகரணங்கள் தொழில்நுட்ப உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான பயிற்சிகள் குறுகிய காலத்தில் வழங்கப்பட உள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ்-2 தேர்ச்சி, 10-ம் வகுப்பு முடித்து ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்கள், 3 முதல் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் உள்ளவர்கள் மற்றும் பட்டய படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயர், கல்வித்தகுதி, முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை http://tinyurl.com/ekavkz27 என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94424 94266, 94430 72649, 94433 84133, 94990 55702 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment