தடுப்பூசி சான்றிதழில் பிழையா? திருத்திக்கொள்ள வாய்ப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, June 10, 2021

தடுப்பூசி சான்றிதழில் பிழையா? திருத்திக்கொள்ள வாய்ப்பு



நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடப்படுகிறது. மத்திய அரசு நடத்தி வருகிற இந்த தடுப்பூசி திட்டத்தின்கீழ், இதுவரையில் 23 கோடியே 90 லட்சத்து 58 ஆயிரத்து 460 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்வோருக்கு ஆன்லைன் வழியாக தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழில் ஏதேனும் பிழை இருந்தால், அதை ‘கோவின்' தளத்தில் போய் சரி செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச்செயலாளர் விகாஸ் ஷீல் தெரிவித்துள்ளார். 


 இதுபற்றி ‘ஆரோக்கிய சேது' டுவிட்டர் பதிவில், “கொரோனா தடுப்பூசி சான்றிதழில் கவனக்குறைவாக பிழைகள் வந்து விட்டால் உங்கள் பெயர், பிறந்த ஆண்டு, பாலினம் தொடர்பான பிழைகளை ‘கோவின்' தளத்தில் போய் சரி செய்து விடலாம்” என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment