தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச் சங்கம் பெண்களுக்காக வாரம் ஒருமுறை தொழில் பயிற்சிகளை நடத்தி வருகிறது.
கரோனா பரவல் காரணமாக, நேரடியாக தொழிற்பயிற்சி அளிக்க முடியாததால், ஆன்லைன் மூலமாக பயிற்சி, வளர்ச்சி என்ற பெயரில் கடந்த ஆண்டு மே முதல் டிசம்பர் வரை வாரம்தோறும் ஞாயிறன்று ஏராளமான தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், மீண்டும் ஆன்லைனில் பயிற்சி நடைபெற உள்ளது.
இந்த வாரம், தொழில் ரீதியாகஐஸ்கிரீம் தயாரிக்கும் வழிமுறைகள், மூலப்பொருட்கள் கிடைக்கும் இடங்கள், இயந்திரங்கள் பற்றிய விவரங்கள், மார்க்கெட்டிங் செய்யும் வழிமுறைகள் பற்றி தெரிவிக்கப்படும். 3 வகையான ஐஸ்கிரீம் தயாரிப்பது பற்றி இதில் தெரிந்து கொள்ளலாம்
இதில், ஆரோக்கிய பயிற்சி குறிப்புகள், அக்குபஞ்சர் டாக்டரின் ஆலோசனை, சரும பராமரிப்பு குறிப்புகள் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.
கைதேர்ந்த நிபுணர்களால் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. ஜூன் 6-ம் தேதி ஞாயிறு (இன்று) மாலை 3 முதல் 4.30 மணிவரை இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்கள்ஆண்ட்ராய்டு போனில் இருந்து form.wewatn.com என்ற இணையதளம் அல்லது 91 93610 86551 என்ற செல்போன் எண் மூலமாக பதிவு செய்ய வேண்டும். பெயர், ஊர், செல்போன் எண் போன்ற விவரங்களை குறுந்தகவல் மூலமாகவும் அனுப்பலாம்.
இதன்மூலம் பெண்கள் வீட்டில்இருந்தபடியே பயிற்சி பெற்று தொழில் தொடங்கலாம். தொழில் பதிவு, திட்ட அறிக்கை, கடன் உதவி,மானியம் குறித்தும் கட்டணமின்றி வழிகாட்டுதல் வழங்கப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.l
No comments:
Post a Comment