காத்மாண்டு, மே 31:
எவரெஸ்ட் மலையின் மீது ஏறி சாதனை
படைத்துள்ளார் சீனாவை சேர்ந்த பார்வையற்ற மலையேற்ற
வீரர். எவரெஸ்டில் ஏறிய ஆசியாவை சேர்ந்த முதல் பார்வையற்
றவர், உலகின் மூன்றாவது பார்வையற்றவர் என்கிற சாதனையை
யும் அவர் சொந்தமாக்கியுள்ளார்.
ஏழு கண்டங்களிலும் உள்ள உயரமான மலைச்சிகரங்களில்
ஏறவும், பின்னர், வட, தென் துருவங்களுக்குப் பயணம் செல்லவும்
விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவை சேர்ந்தவர் ஷாங் காங் (44), பார்வையற்றவரான
இவர், மலையேறும் வழிகாட்டிகளுடன் எவரெஸ்ட் மலை மீது
ஏறத் தொடங்கி, கடந்த மே 24-ஆம் தேதி உச்சியை அடைந்தார்.
பின்னர் பாதுகாப்பாக காத்மாண்டு திரும்பினார்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் கூறியது: 'எவரெஸ்டில்
2001-ஆம் ஆண்டு ஏறிய அமெரிக்காவை சேர்ந்த பார்வையற்ற
எரிக் வெய்ஹென்மயர்தான் எனக்கு உந்துசக்தியாக இருந்தார்.
நீங்கள் பார்வையை இழந்தவரா, கை, கால்கள் இல்லாதவரா என்
பது முக்கியமல்ல;
தீர்மானித்துவிட்டால் மற்றவர்கள் செய்ய முடி
யாததையும் செய்யலாம். உலகம் முழுவதும் உள்ள ஏராளமான
பார்வையற்ற நபர்களுக்கு நான் படைத்துள்ள சாதனை உத்வேகம்
அளிக்கும் என நம்புகிறேன்' என்றார்.
தனது 21 வயதில் கிளாகோமாவால் பார்வையை இழந்த ஷாங்,
திபெத்தில் தன் மனைவியுடன் வசித்து வருகிறார். அங்குள்ள
மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். எவரெஸ்டில் ஏறு
வதற்காக அவர் 30 கிலோ எடைகொண்ட சுமையை முதுகில்
சுமந்து, தான் பணியாற்றி வரும் மருத்துவமனையின் படிக்கட்டுக
ளில் ஏறி சுமார் 5 ஆண்டுகளாகப் பயிற்சியில் ஈடுபட்டார். சீனா
வில் உள்ள சிறிய மலைகளிலும் ஏறியுள்ளார்.
No comments:
Post a Comment