வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவது, பெறுவது: விண்ணப்பம் நேரடியாக வழங்க வேண்டும் வருமானவரித்துறை அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, June 15, 2021

வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவது, பெறுவது: விண்ணப்பம் நேரடியாக வழங்க வேண்டும் வருமானவரித்துறை அறிவிப்பு



வெளிநாட்டுக்கு பணம் அனுப்புதல் மற்றும் பெறுதல் தொடர்பான விண்ணப்ப படிவம் 15 சி.ஏ. மற்றும் 15 சி.பி. ஆகிய படிவங்களை தணிக்கையாளர்கள் சான்றிதழுடன் வருகிற 30-ந்தேதிக்குள் ஆன்லைன் மூலமாக வரி செலுத்துவோர் சமர்ப்பிக்க வேண்டும். 

ஆனால் வருமானவரித் துறை சார்பில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட www.incometax.gov.in என்ற இணையதளத்தில் இதற்கான வசதி தற்போது ஏற்படுத்தப்படாததால் விண்ணப்பம் சமர்ப்பிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. 

இதனை கருத்தில் கொண்டு இந்த விண்ணப்ப படிவத்தை வருகிற 30-ந்தேதிக்குள் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடம் இந்த முறை வரிசெலுத்துபவர்கள் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். புதிய இணையதளத்தில் இதற்கான வசதி ஏற்படுத்தப்பட்ட பின்னர் ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்று மத்திய நேரடி வரிவாரிய கமிஷனர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளார். 


No comments:

Post a Comment