தேனி நலம் மருத்துவமனை - மாவட்ட திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில், பி.எம்.கே.வி.ஒய்., 3.0 திட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆரம்ப சுகாதார நிலையம், அரசு, தனியார் மருத்துவமனைகளில் சுகாதார தொழில்நுட்ப பிரிவுகளில் ஆறு மாத பயிற்சி வழங்கி பணிகள் வழங்கப்பட உள்ளன.
இதற்கான அங்கீகாரத்தை அரசு, தேனி நலம் மருத்துவமனை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 'நலம் அகாடமி' கல்வி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.அகாடமி முதல்வர் காவியா கூறியதாவது:
கொரோனா பரவலை முற்றிலும் கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் நலம் அகாடமியில் எமர்ஜென்சி மெடிக்கல் டெக்னீசியன் (இ.எம்.டி.,), ஜென்ரல் டூயூட்டி அசிஸ்டென்ட் (ஜி.டி.ஏ.,) ஆகிய பிரிவுகளில் பயிற்சிகளை துவக்கி உள்ளோம்.
இதில் சேர விரும்பும் 18 வயது பூர்த்தியான பெண்கள், 10ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்தவர்கள் தங்களது பெயர், கல்வித் தகுதி, முகவரி, அலைபேசி எண், இ-மெயில் முகவரியுடன் கூடிய விபரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை Academy@nalamhospital.in என்ற இணைய முகவரியிலும், 88700 07020 என்ற வாட்ஸ் ஆப்' எண்ணிலும் அனுப்பலாம், என்றார்.
No comments:
Post a Comment