திருக்குறளை விருப்பப் பாடமாக
அறிமுகம் செய்யும் சென்னை பல்கலை.
சென்னை பல்கலைக் கழகத்தில் இளநிலை
இரண்டாவது பருவத்தில் விருப்பப் பாடமாக 'வாழ்வியல்
நெறி முறைகளுக்கு திருக்குறள் எவ்வாறு பயன்படுகிறது என்ற
தலைப்பில் புதிய பாடப் பிரிவு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட்
துணைவேந்தர் கௌரி தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை
நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டுள்ளன. இது குறித்து துணைவேந்தர்
கூறுகையில், 'சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்
டில் செயல்படும் இணைப்புக் கல்லூரிகளில் 2021-22-ஆம்
கல்வி ஆண்டு முதல் வாழ்வியல் நெறிமுறைகளுக்கு திருக்குறள்
எவ்வாறு பயன்படுகிறது' என்பது குறித்த பாடப்பிரிவு இள
நிலை இரண்டாம் பருவத்தில் விருப்பப் பாடமாக சேர்க்கப்ப
டுகிறது.
╰•★★ HEALTH TIPS ★★•╯
தமிழ்த்துறை பேராசிரியர்கள் இது குறித்து விரிவாக
ஆய்வு செய்து பாடத்திட்டத்தில் இணைக்கவுள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில்,
பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர ஓய்வுபெற்ற துணை
வேந்தர்கள், உலகளாவிய கல்வியாளர்கள், பல்கலைக்கழக
மானியக் குழுவில் பணியாற்றி ஓய்வுபெற்ற பிரதிநிதிகள் ஆகி
யோர் இடம்பெறும் உயர்நிலைக் குழு ஒன்றை உருவாக்கப்பட
வுள்ளது.
╰•★★ Join Our WhatsApp ★★•╯
இந்தக் குழு மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவ
தற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.சென்னை பல்க
லைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளும் மாண
வர்கள், தங்களது ஆராய்ச்சி குறித்த கட்டுரையின் கருத்துரு
வினை தமிழிலும் சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்குத் தேவையான மொழிபெயர்ப்பு உதவிகளை
சென்னை பல்கலைக்கழகம் செய்யும்' என்றார் அவர்.
╰•★★ Join Our WhatsApp ★★•╯
No comments:
Post a Comment