மலைப்பகுதியில் படிக்கும், மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த, தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்,'' என, அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
கோவை மாவட்டம், வால்பாறையில், கக்கன்காலனி உண்டு உறைவிடப்பள்ளி மற்றும் நுாலகத்தை ஆய்வு செய்த, பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ், நிருபர்களிடம் கூறியதாவது:வால்பாறை மலைப்பகுதியில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம், பள்ளிகளின் நிலைகள் குறித்து ஆய்வு செய்தேன்.
வனவிலங்கு - மனித மோதலால் தொலை துாரப்பகுதியில் வசிக்கும் மாணவர்கள் பள்ளி செல்வதில் சிக்கல் நீடிக்கிறது. சில எஸ்டேட்களில் போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்வதில் சிரமம் உள்ளது.கல்வித் தொலைக்காட்சி மலைப்பகுதியில் தடங்கலின்றித் தெரிவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
வால்பாறை உள்ளிட்ட மலைப்பகுதியில் கல்விபயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வசதிகளையும், அரசு அளிக்கும். கொரோனா தொற்று குறைந்தபின் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment