மூத்த குடிமக்களுக்கான கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நிறுவனங்களை ஊக்குவிக்க திட்டம் அரசு அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, June 6, 2021

மூத்த குடிமக்களுக்கான கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நிறுவனங்களை ஊக்குவிக்க திட்டம் அரசு அறிவிப்பு

மூத்த குடிமக்களுக்கான கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நிறுவனங்களை ஊக்குவிக்க திட்டம் அரசு அறிவிப்பு 



மூத்த குடிமக்களுக்கு உதவும் உபகரணங்கள் மற்றும் சேவைகளை உருவாக்கும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதுகுறித்து சமூக நீதித் துறையின் செயலர் ஆர்.சுப்ரமணியம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: முதியவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை தேசிய அளவில் கவனத் தில் கொண்டு, அவற்றுக்குத் தீர்வுகாண்பதற்கு ஒவ்வொருவரும் ஒன்றிணைய வேண்டும். 

ஆகவே, முதியவர்களுக்கு உதவும் விதமாக, இதுவரை இல்லாத புதுமையான கண்டுபிடிப்புகள், சேவைகள், நடைமுறைகள் ஆகி யவற்றை உருவாக்குவதில் இளைஞர்களும் தனியார் நிறுவனங்க ளும் முன்வர வேண்டும். அந்த கண்டுபிடிப்புகள், மருத்துவமனை கள், வீடுகள், காப்பகங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தும் வகை யில் இருக்க வேண்டும். 

இதுதவிர, நிதி சார்ந்த உதவிகள், உணவுப் பொருள், சட்ட ஆலோசனை வழங்குதல் போன்ற உதவிகளாகவும் இருக்கலாம். இதில் விருப்பமுள்ள நிறுவனங்கள் சனிக்கிழமை (ஜூன் 5) முதல் பிரத்யேக வலைதளம் வாயிலாக விண்ணப்பிக்க லாம். மத்திய அரசின் நிபுணர்கள் குழு அடுத்த இரண்டு மாதங்க ளில் தகுதியான நிறுவனங்களைத் தேர்வு செய்து, தலா ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கும் என்றார் அவர்.

No comments:

Post a Comment