கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் படிப்பு - தெரிந்து கொள்வோம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, June 22, 2021

கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் படிப்பு - தெரிந்து கொள்வோம்



கணினி அறிவியல் படிப்பானது கணினி அறிவியல் பொறியியல் மற்றும் மின் பொறியியல் ஆகிய இரண்டு துறைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்று சொல்லக்கூடிய வகையில் தொடர்புடைய துறை என்று சொல்லலாம். இது கணினிக் கூறுகளை வடிவமைப்பது மற்றும் சோதனை செய்வது ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். 

https://www.thulirkalvi.net

கணினிப் பொறியாளர்கள், கணினி வன் பொருள் பொறியாளர்கள் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். கணினிப் பொறியியல் (சிஎஸ்இ) என்பது பொறியியல் படிப்புகளில் மிகவும் பிரபலமான ஒரு படிப்பாகும்.இது கணினி நிரலாக்கம் மற்றும் நெட்வொர்க்கிங் ஆகியவற்றின் அடிப்படைக் கூறுகளை மைய மாகக் கொண்டுள்ளது. கணினி அறிவியல் படிப்புகளைத் தொடரும் மாணவர்கள் வன்பொருள் மற்றும் மென்பொருள் ஆகியவற்றின் தகவலமைப்பின் வடிவமைப்பு, செயல்படுத்தல் மற்றும் மேலாண்மை குறித்த அறிவைப் பெறுவார்கள்.  

https://www.thulirkalvi.net


கல்வித்தகுதி:- 

பிளஸ்-2வில் கணிதம், இயற்பியல், வேதியி யல் மற்றும் கணினிப் பாடங் களைப் படித்து அதிக மதிப்பெண் களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இத்துறை இளங்கலைப் படிப்பில் இணையலாம். இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் முதுகலைப் பட்டப்படிப்பில் இணைந்து படிக்கலாம். இந்தியத் தொழில் நுட்பக் கல்லூரியில் படிக்க விரும்பும் மாணவர்கள் தேசிய அளவில் ╰•★★ Join Our WhatsApp ★★•╯ நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் (ஜே.இ.இ.) நல்ல மதிப்பெண்களை எடுத்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தொடர்புடைய படிப்புகள்:- 

பி.டெக் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் 

பி.டெக் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம் 

பி.டெக் கணினி மென்பொறியியல்

 கணினி அறிவியல் மற்றும் பொறியியல் 

கணிதம் மற்றும் கணினிப் பொறியியல் 

தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் 

தகவல் அறிவியல் பொறியியல்

எம்.டெக் கணினிப் பொறியியல் டெல்லி, கரக்பூர், கான்பூர் மற்றும் சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கல்லூரிகள் மட்டுமல்லாது இந்தியாவின் அனைத்து நகரங்களிலுமுள்ள புகழ்பெற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் இத்துறை தொடர்பான படிப்புகள் மிகவும் சிறப்பாக வழங்கப்படுகின்றன. 
அதிகரித்து வரும் மென் பொருள் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப மையங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கணினிப் பொறியாளர் களுக்கான தேவையும் அதிகரித்து வருகின்றது என்றே சொல்லலாம்.



No comments:

Post a Comment