இந்த ஆண்டின் சூரிய கிரகணம் எப்போது, எங்குத் தெரியும்? - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, June 8, 2021

இந்த ஆண்டின் சூரிய கிரகணம் எப்போது, எங்குத் தெரியும்?

கண் பாதுகாப்பு இல்லாமல் வருடாந்திர அல்லது பகுதி கிரகணத்தைப் பார்ப்பது பாதுகாப்பானதா?

சூரிய கிரகணம் 2021 தேதி மற்றும் நேரம்: வருகிற ஜூன் 10-ம் தேதி, வருடாந்திர சூரிய கிரகணம் நடைபெறுகிறது. இது மொத்தம் 3 நிமிடங்கள் 51 வினாடிகள் நீடிக்கும் என்று நாசாவின் வலைத்தளம் தெரிவித்துள்ளது. இந்த வருடாந்திர கிரகணம் ஒரு பகுதி கிரகணம்தான். அதாவது, சூரியனின் ஒரு பகுதி மட்டுமே அதன் மேல் நிழலைக் கொண்டிருக்கும். சந்திரன் சூரியனை மறைக்கும்போது வானத்தில் ‘நெருப்பு வளையம்’ தோன்றும் இடம்தான் கிரகணம். 

ஜூன் 10 அன்று சூரிய கிரகணம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே. வருடாந்திர சூரிய கிரகணம் என்றால் என்ன? சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலவு வரும்போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. மேலும் சில பகுதிகளுக்கு சூரிய ஒளியை ஓரளவு அல்லது முழுமையாகத் தடுக்கிறது. மொத்த சூரிய கிரகணத்தில், சந்திரன் சில பகுதிகளுக்கு சூரிய ஒளியை முழுமையாகத் தடுக்கிறது. அதனால்தான் கிரகணத்தின் உச்சத்தில், வானம் இருட்டாகிறது. 

 இருப்பினும், ஒரு வருடாந்திர கிரகணத்தில், சந்திரனால் சூரியனின் முழு பார்வையையும் தடுக்க முடியாது. மேலும், “இது ஒரு பெரிய, பிரகாசமான டிஸ்க்கின் மேல் ஒரு இருண்ட டிஸ்க் போல இருக்கும்”. இது நாசா விளக்குவது போல் நெருப்பு வளையத்தைப்போலக் காட்சிப்படுத்தும். ஜூன் 10-ம் தேதி வருடாந்திர சூரிய கிரகணம் எங்கே தெரியும்? கனடா, கிரீன்லாந்து மற்றும் வடக்கு ரஷ்யாவின் பகுதிகளில் வருடாந்திர கிரகணத்தைக் காணமுடியும். உலகின் பிற பகுதிகளில், மக்கள் சூரியனின் மேற்பரப்பில் ஒரு இருண்ட நிழலை மட்டுமே காண்பார்கள். 

இது ஒரு பகுதி கிரகணம். அதனால் அவர்கள் ‘நெருப்பு வளையத்தை’ பார்க்க இயலாது. கிழக்கு கிரகணம் காணக்கூடிய பகுதிகள் கிழக்கு அமெரிக்கா, வடக்கு அலாஸ்கா, கனடாவின் பெரும்பகுதி மற்றும் கரீபியன், ஐரோப்பா, ஆசியா மற்றும் வடக்கு ஆபிரிக்காவின் சில பகுதிகள். நாசாவின் கூற்றுப்படி, இந்த இடங்களில் பலவற்றில், சூரிய உதயத்திற்கு முன்பும், நிகழும் நேரத்திலும், சிறிது நேரத்திற்கு பிறகும் கிரகணம் ஏற்படும். 

அருணாச்சல பிரதேசம் போன்ற கிழக்கு மாநிலங்களில் இது தெரியும் என்று சில தகவல்கள் வெளிவந்தாலும், வருடாந்திர கிரகணம் இந்தியாவில் காணப்படாது. இருப்பினும், நாசாவின் அனிமேஷனைப் பார்த்தால் இது அப்படித் தெரியவில்லை. இந்தியா, கிரகணத்தை நிச்சயம் பார்க்க இயலாது. வருடாந்திர சூரிய கிரகணத்திற்கான நேரம் என்ன? 2021 வருடாந்திர சூரிய கிரகண நிகழ்வு, நண்பகல் 01:42 மணிக்கு (IST) தொடங்கி மாலை 6.41 மணி வரை தொடரும். இதில், வருடாந்திர கிரகணத்தின் காலம் சுமார் 3 நிமிடம் 51 வினாடிகள் இருக்கும். 

கண் பாதுகாப்பு இல்லாமல் வருடாந்திர அல்லது பகுதி கிரகணத்தைப் பார்ப்பது பாதுகாப்பானதா? 

சூரிய கிரகணத்தை நேரடியாகப் பார்ப்பது பாதுகாப்பானது அல்ல. பகுதி மற்றும் வருடாந்திர கிரகணங்களுக்குக் கூட இது பொருந்தும் என்று நாசா கூறுகிறது. சூரிய கிரகணத்தைப் பார்ப்பவர்கள் முழு கிரகணம் முழுவதும், குறிப்பாக சூரியனைக் காண விரும்பினால், “solar viewing அல்லது கிரகணக் கண்ணாடிகளை” அணிய வேண்டும் என்று நாசா பரிந்துரைக்கிறது. சூரியக் கண்ணாடிகள் வழக்கமான சன்கிளாஸைப் போன்றவை அல்ல என்றும் அது குறிப்பிடுகிறது. கண்ணாடி இல்லாதவர்களுக்கு, “பின்ஹோல் ப்ரொஜெக்டர் போன்ற மாற்று மறைமுக முறையை” முயற்சி செய்ய வேண்டும் என்று நாசா மேலும் கூறுகிறது. ஆனால், சூரியனை நேரடியாகப் பார்க்க இவற்றைப் பயன்படுத்தக்கூடாது.

No comments:

Post a Comment