வனச்சரகர் பதவி உயர்வை உடனடியாக
வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர்
ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் தனது
ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் வனச்சரகர் பணியிடங்கள்
மிக அதிக எண்ணிக்கையில் காலியாக
உள்ள நிலையில், வனக்காப்பாளர்களுக்கு
வனச்சரகர் பதவி உயர்வு வழங்குவது
தாமதப்படுத்தப்படுகிறது.
பதவி உயர்வு
பட்டியல் தயாரிக்கப்பட்டு 10 மாதங்களாகி
யும் நடைமுறைப்படுத்தவில்லை. வனக்
காப்பாளர்கள் பலருக்கு 16 ஆண்டுகளில்
கிடைத்திருக்க வேண்டிய 2-வது பதவி
உயர்வு 21 ஆண்டுகளாகியும் இன்னும்
வழங்கப்படாதது சமூக அநீதி. எனவே, வனச்
சரகர் பதவி உயர்வை உடனே வழங்க அரசு
முன்வர வேண்டும். இவ்வாறு ட்விட்டர்
பதிவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment