ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் - மோசடி சலுகைகள் குறித்து எச்சரிக்கை - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, June 10, 2021

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் - மோசடி சலுகைகள் குறித்து எச்சரிக்கை


ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் B-14/ A, சத்ரபதி சிவாஜி பவன், குதிப் இன்ஸ்ட்டிடியூசனல் ஏரியா, கத்வாரியாசாரை, புதுடெல்லி - 110016 

பொது அறிவிப்பு 1 ஜூன் 2021 PFRDA/NPS பெயரில் வரும் மோசடி சலுகைகள் குறித்து எச்சரிக்கை 

NPS/PFRDA-ல் உள்ள சேமிப்பு பணத்தை அதிக அளவில் விடுவித்து தருவதாக உறுதி செய்து PFRDA பெயரில் சில மோசடி பேர் வழிகள் போனில் அழைப்பு விடுப்பதாகவும் மற்றும் கண்டறியப்படாத இந்த போலி நபர்கள் தொகையை பெற்று தருவதற்காக பணம் பறிக்கும் நோக்கில் போலியான விளக்கங்களை கொடுப்பதாகவும் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.

 PFRDA என்பது தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS)-ஐ ஒழுங்குமுறைப்படுத்தும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். NPS/PFRDA-பெயரில் அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பறிக்க முயலும் இந்த மோசடி நபர்களிடம் ஏமாந்து விட வேண்டாம் என பொது மக்களுக்கு இதன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. 

NPS/PFRDA-ல் இருந்து பணம் பெறுவதற்கு தொகை செலுத்துமாறு எந்த ஒரு நபருக்கும் PFRDA எப்பொழுதும் போனில் அழைப்பு விடுப்பது இல்லை. மோசடி செய்யும் | நோக்கில் வரும் இந்த போன் அழைப்புகள் குறித்து உடனடியாக "காவல்துறையிடம்" தகவல் தெரிவியுங்கள்


No comments:

Post a Comment