நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநர் பணியிடத்தை, இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) நிலைக்கு உயர்த்த வேண்டுமென தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை பட்டய பொறியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் மு.மாாிமுத்து நேற்று கூறியதாவது:
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் 9 தலைமை பொறியாளர் பணியிடங்கள் இருக்கின்றன. இப்பணியிடத்தில் ஒரு பணியிடம் முதன்மை இயக்குநர் பணியிடமாகும். இந்த பணியிடம் நிர்வாகம் சார்ந்தது. ஆனாலும் நெடுஞ்சாலை பொறியியல் பணி விதிகளின்படி உதவிப் பொறியாளர்களாக டிஎன்பிஎஸ்சி மூலம் நியமனம் பெறுவர்கள்தான் படிப்படியாக பதவி உயர்வு பெற்று இந்த பணியிடத்துக்கு வருகிறார்கள். சுமார் 40 ஆண்டுகளாக இந்த விதிகள் மாற்றப்படாமல் இருந்து வருகிறது. இது நெடுஞ்சாலைத் துறையில் பொறியாளர்களுக்கு சாதகமாகவும் மற்ற பணியாளர்களுக்கு பாதகமாகவும் உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளின் புள்ளி விவரங்களை ஆய்வு செய்தால் பொறியாளர்களுக்கு மட்டும் பதவி உயர்வு அதிகமாகவும் மற்ற பணியாளர்களுக்கு மிகவும் குறைவாகவும் வழங்கப்பட்டுள்ளதுதொிய வரும். எனவே நெடுஞ்சாலைத் துறையின் முதன்மை இயக்குநர் என்றபணியிடத்தை நிர்வாக இயக்குநர் என்று மாற்றி, ஐஏஎஸ் தகுதிக்கு உயர்த்தப்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment