மத்திய அரசு துறைகளின் செயலர்களுக்கும், பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கும், சி.வி.சி., எனப்படும் மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு கமிஷன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
MOST READ
அரசு பணியிலிருந்து ஓய்வு பெறுவோர், குறிப்பிட்ட காலம் வரை, வேறு எந்த பணியிலும் சேரக் கூடாது என்ற விதி உள்ளது. இதை மதிக்காமல் சிலர், ஓய்வு பெற்ற உடனேயே, தனியார் நிறுவனங்களில் முழு நேர ஊழியராகவோ, பகுதி நேர ஊழியராகவோ பணியில் சேர்கின்றனர்; இதை தடுக்க வேண்டும்.
ஓய்வு பெற்ற பின், குறிப்பிட்ட காலத்துக்கு எந்த பணியிலும் ஊழியர்கள், அதிகாரிகள் சேரக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில், சில வழிகாட்டு நெறிமுறைகளை அரசு துறைகளும், பொதுத்துறை நிறுவனங்களும் உருவாக்க வேண்டும். ஓய்வு பெற்றோர், உடனடியாக வேறு பணியில் சேரவில்லை என்பதை, சம்பந்தப்பட்ட துறைகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. SOURCE NEWS
No comments:
Post a Comment