இந்தியன் புக் ஆப் ரிக்கார்ட்ஸில் மதுரையின் ‘குயின் ஆப் சயின்ஸ்' - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, June 4, 2021

இந்தியன் புக் ஆப் ரிக்கார்ட்ஸில் மதுரையின் ‘குயின் ஆப் சயின்ஸ்'

மதுரை, ஜூன் 3 மதுரை கணித ஆசிரி யர் சுகன்யா உருவாக்கிய ஒரே படத்தில் 200 வித மான கணித பாடங்களை கற்றுத் தரும் 'குயின் ஆப் சயின்ஸ்" என் கணித ஓவி யம் 'இந்தியன் புக் ஆப் ரிக்கார்ட்ஸ்' புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. சுகன்யா கூறியதாவது: 


ஒரு கணித ஆசிரியராக மாணவர்களுக்கு கணித பாடங்களை எளிதில் புரிய வைக்க முயற்சி செய்த போது தான் 'குயின் ஆப் சயின்ஸ்' என்ற கணித ஓவிய ஐடியா வந்தது. இதில் உள்ள செஸ் போர்டு போன்ற வைத்து 1-10ம் வகுப்பு மாணவர்களுக்கு 200 வித மான கணித பாடங்களை கற்று கொடுக்க முடியும். செஸ்ஸில் 'குயின்'க்கு முக்கியத்துவம் உள்ளது போல் அறிவியலில்கணி தத்திற்கு முக்கியத்துவம் உண்டு என்பதால் தான் கணித ஓவியத்திற்கு 'குயின் ஆப் சயின்ஸ்' என பெயர் வைத்தேன். 


கணிதம் என்றாலே பயந்து ஓடும் மாணவர்களுக்கு ஓவியம் வழி கற்று கொடுப்பதால் மனதில் பதிவதோடு பயம் நீங்கும். இதை வெளியுலகிற்கு கொண்டு வர வேண்டும் என நினைத்து இந்தியன் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் 'க்கு ஆதாரங்களுடன் அனுப் பினேன். அவர்கள் அதை  ஆய்வு செய்து, அங்கீகரித்து புத்தகத்தில் இடம் பெற செய்து சான் நிதழ், மெடல், பேனா, பேட்ச், ஐடி கார்டு வழங் கினர். பார்வையற்ற குழந் தைகளுக்காக இந்த கணித ஓவியத்தை 'பிரெய்லி க்கு மாற்ற திட்டமிட்டுள் ளேன். 

நாம் காணும் இடமெல் லாம் கணிதம் இருக்கிறது என்பதை புரிய வைத்தால் கணித பாடம் மாணவர் களுக்கு சுமையாக இருக் என் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த கணவர் கார்த்திக், குடும் பத்தினர், நண்பர்களுக்கு நன்றி, என்றார். suganyasathasivam@ gmail.com

No comments:

Post a Comment