பொறியியல் படிப்போம்! பலருக்கும் வேலை கொடுப்போம்! - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, June 24, 2021

பொறியியல் படிப்போம்! பலருக்கும் வேலை கொடுப்போம்!

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை" என்று செல்வங்களில் தலையானது கல்விச் செல்வமென்றார் திருவள்ளுவர். அப்படிப்பட்ட தலையான கல்விச் செல்வம் கிராமப்புற மற்றும் அடித்தட்டு மக்கள் வரையில் பெறப்பட வேண்டும். 


அவர்கள் பெறும் தொழில் சார்ந்த, நவீன தொழில் நுட்பம் சார்ந்த, உலகத்தரம் வாய்ந்த சுல்வியே, ஒவ்வொரு தனிமனிதனையும் அவன் சார்ந்த சமுதாயத்தையும், அவன் நாட்டையும் உயர்த்தக்கூடியதும்" என்று ஆணித்தரமாக கூறி தன் பேட்டியை துவங்கினார், ஜெயா கல்விக் குழுமத்தின் தலைவர் கனகராஜ் அவர்கள், ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது தொழில் துறையின் வளர்ச்சிக்கான உற்பத்தி, வேலை வாய்ப்பு, ஏற்றுமதி போன்றவைகளை உள்ளடக்கியது. தொழில்துறை என்பது பொறியியல், அறிவியல் தொழில் நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டது. எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் அதாவது மருத்துவம், விவசாயம், கட்டுமானம், அரசாங்க பணிகள் என்று எத்துறையை எடுத்துக்கொண்டாலும் அத்துறைகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாகவும், முக்கியமானதாகவும், பக்கடகப்பாகவும் இருப்பது பொறியியலே. எனவே, பொறியியல் படிப்பு என்பது எந்த காலத்திலும் முக்கியமான தேவையான படிப்பாகும். 

பொறியியல் படிப்பு மாணவர்களை திறமையானவர்களாகவும், செயல் திறன் கொண்டவர் களாகவும் உருவாக்க வேண்டும் என்றால் இன்றைய கல்விக்கொள்கைகளில் சில பாற்றங்கள் அவசியமாகிறது. வகுப்பறையில் பாடங்களை படிப்பது மட்டுமின்றி, அதிகளவில் செயல்முறை பயிற்சி வகுப்புகள் அவசியம். அதுமட்டுமின்றி சுய சிந்தனையுடன் தன் துறை சார்ந்த பல்வேறு விஷயங்களை, தன் பாடப்புத்தகங்களைத் தாண்டியும் தெரிந்து கொள்ள சிறந்த நூலகங்கள் இருக்க வேண்டும். 

இம்மாதிரி வகுப்பறை பாடங்களுடன் நூலகப் படிப்பும், செயல்முறை கல்வியும் வழங்கப்படும்போதுதான் ஒரு மாணவன் தன் பட்டப்படிப்பை முடிக்கும்போது தான் படித்த கல்வியை தன்னம்பிக்கையோடு பயன்படுத்த தயாராகிறான். இம்முறையில் சிறப்பாக பொறியியல் முடித்த மாணவர்கள் எல்லோருமே அரசாங்க வேலைகளையோ, உள்ளூர் நிறுவனங்களையோ வேலைக்காக நம்பி இருக்காமல், வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்லவோ, உள்ளூரில் தொழில் தொடங்க பல பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் தொழில் அதிபர்களாகவோ உருவாகிறார்கள். கல்வி என்று பார்க்கும்போது மொழி முக்கியமான ஒரு பகுதியாக இருக்கிறது. தாய் மொழியில் கற்பது மிகவும் சிறப்பு, தாய் மொழியில் கற்கும்போது ஆழ்ந்த புரிதலுடன் ஊன்றி படிக்க முடியும். 

அதே நேரத்தில் தொழிற்கல்வி பெறும் மாணவர்கள் ஆங்கிலத்தையும் சிறப்பாக கற்றிருக்க வேண்டும். சர்வதேச அளவிலான தொழில் நுட்பக்கல்வி, ஆராய்ச்சிப்பணி போன்றவற்றை கற்கவும், தன் சிந்தனைகளை உலகத்திற்கு கொண்டு செல்லவும் மாணவர்களுக்கு ஆங்கிலம் இன்றியமையாததாகிறது. எனவே மாணவர்களுக்கு சுய சிந்தனையை வளர்க்கக்கூடிய, செயல் முறை பயிற்சிகள் கொண்ட அவரவர் தாய் மொழியும், ஆங்கிலமும் கொண்ட ஒரே
மாதிரியான பாடத்திட்டம் (சிலபஸ்) காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான நாடு முழுவதற்கும் கொண்டு வரப்பட்டால்பானவர்களின் ஆர்வத்திற்கும், வேகத்திற்கும் ஈடுகொடுக்கக்கூடிய தொழிற்கல்வியாக அது அமையும். பொறியியல் பட்டப்படிப்பு உலகளவில் எல்லாத் துறைகளிலும் வேலை வாய்ப்பளிக்கக் கூடிய ஒரு படிப்பாகும். வேலை பெறுபவர்களாக இல்லாமல் வேயை தருபவர்களாக பொறியியல் மாணவர்கள் உருவாக வேண்டும். ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியுடனும் ஒரு மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்று விதி உள்ளது. 

மாக்கோர்ட் அமைக்கப்படுகிறது. அதேபோல் ஒவ்வொரு பொறி மியல் கல்லூரியுடனும் ஒரு தொழிற்கூடம் அமைக்கப்பட வேண்டும் என்பது அவசியம். இதனால் மாணவர்கள் செயல்முறை பயிற்சிகளை பெறுவதற்கும், வேலை வாய்ப்பு பெறுவதற்கும் இது உறுதி செய்யும். மேலும் பொறியியல் முடித்த மாணவர்கள் தொழில் தொடங்க முன்வந்தால் அவர்களுக்கு உதவிகளையும், சலுகைகளையும், மானியங்களையும் கொண்ட அரசாங்க திட்டங்கள் துணைபுரிய வேண்டும். இதனால் பொறியியல் பட்டதாரிகள் அரசாங்க வேலை ஈவாய்ப்புகளை நம்பி இல்லாமல் தொழில்துறை மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு பெறும் பங்காற்றுவார்கள். 

பொறியியல் கல்வி என்பது மிகவும் சிறந்த ஒரு படிப்பாகும். எல்லாத்துறைகளின் வளர்ச்சிக்கு பொறியியல் தொழில்நுட்பமே பக்கபலமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட பொறி யியல் கல்லூரிகள் இருக்கின்றன. அதன் மூலம் ஆயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் உருவாக்கப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் பயன்பெறும் முறையில் நடுத்தர சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.ஈ.) கொண்ட தனியார் தொழில்துறை வளர்ச்சியடைய வேண்டும். தொழில் தொடங்கவும், ஏற்றுமதி செய்யவும் சுலபமான வழிமுறைகள் மூலம் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். உழவுக்கும் தொழிலுக்குப் வந்தனை செய்வோம் என்ற சொல்லுக்கேற்ப தொழில்துறை வளர்ச்சி மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த பொறியியல் பட்டதாரிகள் காத்திருக்கின்றனர். துவர்களை ஊக்குவிப்போம், அவர்களின் சாதனைகளை பாராட்டுவோம் என்று சடறி முடித்த கனகராஜ் அவர்களின் ஜெயா கல்விக் குழுமத்தின் கல்லூரிகளில் சிறந்த மாணவர்களை உருவாக்கும் பொருட்டு நவீன தொழில் நுட்பங்கள் கொண்ட வகுப்பறைகள், பயிற்சி கூடங்கள், நூலகங்கள் போன்ற வசதிகள் உள்ளதுடன் நியாயமான கல்விக் கட்டணங்கள் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது



No comments:

Post a Comment