'கற்றலின்போது இடைவேளை அவசியம்' - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, June 23, 2021

'கற்றலின்போது இடைவேளை அவசியம்'

'கற்றலின்போது இடைவேளை அவசியம்' 
 ╰•★★ Join Our WhatsApp ★★•╯ 
புதிய கற்றலின்போது குறுகிய இடைவெளி எடுத்துக்கொள்வது மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் என்று புதிய ஆய்வு கூறுகிறது. தற்போதைய சூழ்நிலையில் மாணவர்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் எதிர்கால நலன் கருதி புதிய பயிற்சிகளை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். 

அவ்வாறு புதியவற்றைக் கற்றுக்கொள்ளும்போது பயிற்சியின் இடையே சிறிது இடைவெளி எடுத்துக்கொள்வது நல்லது என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள். சில மாணவர்கள் படித்துக்கொண்டிருக்கும்போது அடிக்கடி இடைவெளி எடுத்துக்கொள்வதுண்டு. இதற்கு ஆசிரியர்கள். பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கம். ஆனால், பயிற்சி அல்லது கற்றலின் இடையே அவ்வப்போது பிரேக் எடுத்துக்கொள்ள வேண்டும். 

தொடர்ந்து படிக்கும்போது மாணவர்களுக்கு அதன்மீது சலிப்பு ஏற்படலாம், சோம்பேறித்தனம் ஏற்படலாம். இவ்வாறு ஓய்வு எடுப்பது அவர்களின் மூளையை புத்துணர்வாக்க உதவும். அதாவது 45 நிமிடங்கள் படித்தால் அடுத்ததாக ஒரு 5 அல்லது 10 நிமிடங்கள் இடைவெளி எடுப்பது மூளையை புத்துணர்வாக்க உதவும். இவ்வாறு இடைவெளி எடுத்துக்கொள்வதால் அடுத்ததாக மாணவர்களால் விரைவாக கற்றுக்கொள்ள முடியும். 

 அந்த 5 நிமிட இடைவெளியில் நீங்கள் ஓய்வு எடுப்பதுபோன்று அவர்களின் மூளையும் புத்துணர்வு அடைகிறது. இதனால் ஆரோக்கியமான கற்றலை மாணவர்கள் அடைய முடியும். 'செல் ஆய்வுகள்' (Cell reports) என்ற இதழில் அமெரிக்க ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஓய்வின் போது விழித்திருக்கும் மூளை ஒரு புதிய திறமையைக் கற்றுக்கொள்ளத் தேவையான நினைவுகளை ஒன்றிணைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்கு காரணமான மூளையின் சென்சார்மோட்டர் பகுதிகளில் மட்டுமின்றி மற்ற மூளைப் பகுதிகளான ஹிப்போகாம்பஸ் மற்றும் என்டார்ஹினல் கோர்டெக்ஸ் ஆகியவற்றிலும் அவர்கள் செயல்பாட்டைக் கண்டனர். புதிய திறன்களை விரைவாகக் கற்றுக்கொள்ளவும், பக்கவாதத்திலிருந்து மறுவாழ்வு பெறவும் இந்த முறையை ஆய்வாளர்கள்பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment