தெரிந்து கொள்வோம் இசை ‘தெரபி’ குளியல்
╰•★★ Join Our WhatsApp ★★•╯
இசையைக் கேட்டுக் கொண்டே குளித்தால் மன அழுத்தம் பறந்தோடிவிடும். இதேபோல் இசை தெரபி குளியல் மூலமாகவும் மன அழுத்தத்தை எளிதாக போக்கிட முடியும் என்கிறார்கள், மனநல மருத்துவர்கள். இசையே அருமருந்து என்பார்கள். அதுபோலத்தான் மன அழுத்தத்திற்கு இசை ஒரு சிறந்த தெரபியாக பயன்படுகிறது.
இசையை பிடிக்காதவர்கள் யாரேனும் இருக்க முடியுமா? இசை தான் இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் பாரபட்சமின்றி ஈர்க்கக்கூடியது. எனவே மன அழுத்தத்தை போக்க சவுண்ட் பாத் தெரபி தற்போது செய்யப்படுகிறது.
மன அழுத்தம் மற்றும் பதற்றம் தொடர்பான விளைவுகளை இந்த தெரபி மூலம் மாற்ற முடியும்.
இசை தெரபி என்பது தியானம் மற்றும் கற்பனை ஓட்டங்கள் மாதிரி செயல்படுகிறது. இது கிளர்ச்சியுற்ற நரம்புகளை அமைதிப்படுத்தி உணர்வுகளை கட்டுப்படுத்துகிறது.
சில நேரங்களில் உடல் வலிக்கு வெதுவெதுப்பான குளியல் எடுத்துக் கொள்வது போல இந்த ‘சவுண்ட் பாத்’ மன வலிக்கு இதமாக மாறுகிறது. மனதுக்கும் உடலுக்கும் ஒரு முழுமையான நிம்மதியை தர உதவுகிறது.
இதை எடுத்துக்கொள்ள எந்த விதிகளும் இல்லை. சாதாரணமாக நீங்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டோ அல்லது படுத்துக் கொண்டோ நிதானமாக கண்களை மூடிக் கொண்டு அறையில் வெளிப்படும் ஒலிகள் மற்றும் இசையை காதால் கேட்டு ரசிக்க வேண்டும். சில நேரங்களில் அறையில் இனிமையான ஒலிகளை அறிமுகப்படுத்த போர்க்ஸ், கோங்ஸ், படிக கிண்ணங்கள் மற்றும் சைம்ஸ் போன்ற கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. சில மருத்துவ சிகிச்சையாளர்கள் தங்கள் சொந்த குரலில் இசையை எழுப்பிக் கூட உங்களை குணப்படுத்த உதவுகிறார்கள். இந்த இசை குளியலை நீங்கள் மனதார கேட்கும்பொழுது, உங்கள் உணர்வுகள் யாவும் உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன.
இசைத்தட்டுக்கள், ஸ்பீக்கர், கோங்ஸ் மற்றும் பிற கருவிகளின் பயன்பாட்டின் மூலம், உருவாக்கப்பட்ட அதிர்வுகள் உங்களைச் சுற்றிலும் மன அமைதி, சமநிலை மற்றும் தளர்வு உணர்வைத் தருகின்றன. இது உடலை படிப்படியாக தியான நிலைக்கு தள்ளுகிறது. இப்படி செய்யும்போது தூக்கமின்மை பிரச்சினை, நினைவாற்றல் மற்றும் செரிமானத்தை பாதிக்கும் பிற தூண்டுதல்களைச் சமநிலைப்படுத்தி, நீண்ட கால நோய்கள் நம்மை ஆட்கொள்ளாமல், மன அழுத்தத்தைப் போக்குகிறது.
இதயம் மற்றும் சுவாசத்தின் வேகத்தை நிதானப்படுத்தி உடலில் ஒரு சமநிலையை உருவாக்குகிறது.
இது உங்கள் எண்ணங்களில் கலந்துள்ள நச்சுக்களை வெளியேற்றவும், நரம்பு மண்டலத்தை மீட்டமைப்பதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், வலி நடுக்கங்களை சமாளிக்கவும் பயன்படுகிறது. இது ஒரு பாரம்பரிய மருத்துவ முறையின் வடிவமாக இருப்பதால் நிபுணர்களும் இந்த முறையை பரிந்துரைக்கின்றனர்
No comments:
Post a Comment