சென்னையில் கல்லூரி பேராசிரியராக இருந்தவர் மவுஷ்மி. தற்போது, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பேருந்து ஓட்டுநர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ""தமிழ்நாடுதான் எனது பூர்வீகம். பேராசிரியராக இருந்தபோது, துபாயில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதை ஏற்றுக் கொண்டு துபாய்க்கு சென்றேன். அங்கு
தான் எனக்கு திருமணமும் முடிந்தது. குழந்தையும் பிறந்தது.
திடீரென குடும்ப உறவில் விரிசல் ஏற்படவே, நான் தமிழ் நாட்டிற்கு திரும்பிவிட்டேன். அப்போது என் மகனுக்கு ஒன்றரை வயது.
தனி பெண்ணாக, அதுவும் தனிமைத் தாயாக சமூகத்தில் வாழ்வது ரொம்பவே கடினமானது. பல சிரமங்களை சந்தித்தேன். அந்த சமயத்தில், நண்பர் ஒருவர் ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர ஆய்த்தமானார். அவரது உதவி மூலம், நானும் ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தேன்.
ஆஸ்திரேலியா வந்ததும் வங்காள தேசத்து தம்பதிகளின் வீட்டில் ஷேரிங் முறையில் தங்கி கொண்டேன். அப்போது தான் ஆஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டுநர்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கும்.
அதே போல மரியாதையும் உண்டு என்று அறிந்தேன்.
அதனால், முறைப்படி ஓட்டுநர் பயிற்சி பெற்று பேருந்து ஓட்ட ஆரம்பித்தேன். பேருந்து ஓட்டுநராக பணிக்கு சேர்ந்ததும், முதல் ஆறுமாதங்கள் கடினமானதாக இருந்தது. பெரிய வாகனத்தில் மக்களை ஏற்றிக் கொண்டு புதுப்புது நகரங்களுக்கு செல்ல வேண்டும். பெரிய வாகனத்தை ரிவர்ஸ் எடுப்பது, குறுகிய சாலைகளில் திருப்புவது, பாதைகளை மனப்பாடம் செய்வது என்று. இப்போது அனைத்தும் பழகிவிட்டது. எவ்வளவு பெரிய பேருந்தாக இருந்தாலும் , ஆஸ்திரேலியாவின் எந்த நகரமாக இருந்தாலும் சரி, பயணிகளை பத்திரமாக கொண்டு சேர்த்து விடுவேன்' என்கிறார் மவுஷ்மி.
No comments:
Post a Comment