தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்தல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!! - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, June 7, 2021

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்தல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!!

 தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், 

சென்னை-6. 

ந.க.எண்.27576/3/2021 நாள். 07.06.2021. 

பொருள் : 

பள்ளிக் கல்வி தேசிய நல்லாசிரியர் விருது, 2021 விண்ணப்பங்களை இணையதளம் மூலம் 20.06.2021 க்குள் விண்ணப்பிக்க ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் தொடர்பாக, 

பார்வை: 

Joint Scretary, MHRD, Department of School Education &Literarcy)New Delhi, Lr.No. F1-16/2021-NAT, Dt.31.05.2021. 

பார்வையில் காணும் புதுடெல்லி, மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குநரின் கடிதத்தில் 2020ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தகுதியுள்ள ஆசிரியர்களை நேரிடையாக 20.06.2021 க்குள் http:/nationalawardstoteachers.education.gov.in என்ற இணையதள முகவரியில் நேரிடையாக பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய நல்லாசிரியர் விருதிற்கு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரிடையாக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கக் கூடாது. 2020 ஆம் ஆண்டில் குறைந்தது 4 மாதங்கள் முறையான பணியில் பணியாற்றி இருக்க வேண்டும்.(2020 ஏப்ரல் 30 வரை ) 



அலுவலகங்களில் நிர்வாகப்பணி மேற்கொள்ளும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க கூடாது மனிதவள மேம்பாட்டுத் துறையில் இணை தளத்தில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ஆசிரியர்கள் 20.06.2021 க்குள் மேற்குறிப்பிட்ட இணைய தளத்தில் மட்டுமே நேரடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மேற்காண் விவரங்களை விரிவாக தங்கள் மாவட்ட நாளிதழில் செய்தி வெளியிட்டு, குறிப்பாக தங்கள் ஆளுகைக்குட்பட்ட தங்கள் அளுகைக்கு உட்பட்ட அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளவும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு உடனடியாக சுற்றறிக்கை அனுப்பி தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் தெரிவிக்கலாகிறது. அலுவலக விளம்பர பலகையில் விரிவாக விளம்பரம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

பள்ளிக் பள்ளிக் கல்வி ஆணையருக்காக 

இணைப்பு: National Award Guidelines. 

பெறுநர்: 

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், 

நகல்கள்: 

1. அரசு முதன்மைச் செயலர், பள்ளிக் கல்வித் துறை, தலைமைச் செயலகம், சென்னை-9, தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது. 

2. இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை - 6 
தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது. DOWNLOAD AS PDF 

No comments:

Post a Comment