இடது கை பழக்கம் வருவது ஏன்? பெற்றோர் அதை மாற்றுவது சரியா? - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, June 9, 2021

இடது கை பழக்கம் வருவது ஏன்? பெற்றோர் அதை மாற்றுவது சரியா?


90 சதவீதம் மக்கள் வலது கை பழக்கமுடையவர்களாகவே இருக்கிறார்கள். அதனால், இடது கை பழக்கமுடையவர்களைப் பார்க்கும்போது, இயல்புக்கு மாறாக இருக்கிறார்களோ என்று பதற்றமடைகிறார்கள். 


எனவே, இடது கை பழக்கம் உள்ளவர்களை வலது கை பழக்க முடையவர்களாக மாற்றுவதற்கு முயல்கிறார்கள். ஆனால், அப்படிச் செய்வது தவறு. நம் பெருமூளை இரண்டு அரைக்கோள வடிவில் இருக்கிறது. பெரும்பாலானவர்களுக்கு இடது அரைக்கோளம் சற்று மேலோங்கி இருக்கும். 


இதனால்,இவர்களுக்கு வலது பக்க உறுப்புகள் சிறப்பாகச் செயல்படும். சிலருக்கு வலது அரைக்கோளம் சற்று மேலோங்கி இருக்கும். இவர்களுக்கு இடது பக்க உறுப்புகள் சிறப்பாகச் செயல்படும். இது இயற்கையால் உருவாகும் மாற்றம். 

இதை வலுக்கட்டாயமாக மாற்றும்போது இடது கை பழக்கமுள்ளவர்கள் சிரமப்படுவார்கள். மனதளவிலும் பாதிக்கப்படுவார்கள். அதனால்,இவர்களை இடது பழக்கம் உள்ளவர்களாகவே விடுவதுதான் சிறந்தது. இடது கை பழக்கம் உள்ளவர்கள் புத்திக்கூர்மையுடன் இருப்பார்கள். காரணம், பெரும்பாலானவர்களிடமிருந்து அவர்கள் மாறுபட்டிருப்பதால் கிடைக்கும் சாதக அம்சம். படிப்பு, விளையாட்டு, விவாதம் போன்றவற்றில் சிறப்பாகச் செயல்படுவார்கள்

No comments:

Post a Comment