தொடர்ச்சியாகக் கொட்டாவி வருவது ஏன்? - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, June 9, 2021

தொடர்ச்சியாகக் கொட்டாவி வருவது ஏன்?


கொட்டாவி வருவதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டுவந்தன. அவற்றில் ஒன்று, கூடுதல் வேலையின் போது மூளை வெப்பமடையும். அதனைக் குளிர்விக்கத்தான் கொட்டாவி வருகிறது. 


வாயை அகலமாகத் திறந்து காற்றை உள்ளே இழுக்கும்போது, குளிர்ந்த ரத்த ஓட்டம் மூளைக்குப் பாயும் என்று உடலியல் ஆய்வாளர்கள் சொன்ன கருத்தை, 2016-ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட ஓர் ஆய்வு ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஒருவர் கொட்டாவி விட்டவுடன் தொடர்ச்சியாக அருகில் இருப்பவர்களும் கொட்டாவி விடுவது ஏன் என்பதற்கும் பல்வேறு காரணங்களைச் சொல்கிறார்கள். 


இதுதான் காரணம் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. ஒருவர் கொட்டாவியை நினைத்தால்கூடக் கொட்டாவி வந்துவிடும்; மனிதர்கள் கொட்டாவி விடுவதைப் பார்க்கும் நாய்களும் கொட்டாவி விடுகின்றன என்றெல்லாம் கண்டுபிடித்திருக்கிறார்கள்

No comments:

Post a Comment