அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த நிபுணர் குழு ஐகோர்ட்டு உத்தரவு - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, June 8, 2021

அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த நிபுணர் குழு ஐகோர்ட்டு உத்தரவு

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் சம்பள விகிதம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை ஐகோர்ட்டு நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்ச்செல்வி ஆகியோர் விசாரித்தனர். 


இந்த வழக்கு விசாரணையின்போது, பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அடிப்படை கல்வித்தரத்தை உயர்த்தவும், அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தமிழக அரசு அனைத்து ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்தார்.
 
MOST READ 

அரசு பள்ளிகளை அருகில் உள்ள தொழில்நிறுவனங்கள் தத்தெடுத்து உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மூத்த வக்கீல் கேட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து நீதிபதிகள், ‘அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும். 

அரசு பள்ளிகளை அருகில் உள்ள தொழில்நிறுவனங்கள் தத்தெடுத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும் கல்வித்துறை கவனத்தில் கொள்ள வேண்டும்' என்று உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணையைத் தள்ளி வைத்தனர்

No comments:

Post a Comment