கடந்த, இரண்டாண்டு காலமாக, மனித குலத்தின் முழு கவனமும், கொரோனா தொற்றையே சுற்றி, சுற்றி வந்துக் கொண்டிருக்கிறது.தொற்றை முற்றிலும் ஒழிக்க, மருத்துவ உலகம், ஆய்வுகளில் கவனம் செலுத்தி வரும் அதே நேரம், சில ஆராய்ச்சிகள், நமது உடல்நலன் சார்ந்த விஷயங்கள் குறித்தும், அலசி ஆராய்ந்து, நினைவு படுத்திக் கொண்டிருக்கின்றன.
கடந்தாண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம், பெங்களூரு தேசிய நோய் தகவல் ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து, வெளியிட்ட ஆய்வறிக்கையில்,' முந்தைய நான்கு ஆண்டுகளில், இந்தியாவில் புற்றுநோய் பாதித்தவர் எண்ணிக்கை, கணிசமாக உயர்ந்துள்ளது.கடந்த, 2016 ல், 12.6 லட்சமாக இருந்த இந்த எண்ணிக்கை, 2020ல், 13.9 லட்சமாக அதிகரித்தது. இதே நிலை நீடித்தால், 2025ல் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, 15.7 லட்சத்தை எட்டிப்பிடிக்கும்' என, தெரிவித்துள்ளது'இந்தியாவில், புற்றுநோய் பரவல் என்பது, 27 சதவீதம் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படுகிறது; புகைப்பழக்கம் உள்ள பெரும்பாலானோர், நுரையீரல் புற்று நோய்க்கு ஆளாகின்றனர்' என்றும், அதில் கூறப்பட்டுள்ளது.
தொற்றுப் பரவலால் தினம், தினம், கொத்து கொத்தாக மனித குலம், மடிந்து கொண்டிருக்கும் சூழலில், 'புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, தொற்று பரவ வாய்ப்பு அதிகம்' என்ற எச்சரிக்கையையும் மத்திய சுகாதாரத்துறை விடுத்திருந்தது.கடந்த, 1987ல் உலக சுகாதார நிறுவனம், மே 31ம் தேதியை, உலக புகையிலை எதிர்ப்பு தினமாக அறிவித்தது. புகைபிடிப்பதால் வாய், நுரையீரல், சிறுநீரகம், மார்பகம் ஆகியவற்றில், புற்றுநோய், ஆஸ்துமா, காசநோய், இதயநோய், உயர் ரத்த அழுத்தம், செவிட்டுத்தன்மை, மலட்டுத்தன்மை உள்ளிட்ட பல நோய்கள் வருவதாகவும் மருத்துவ உலகம் கூறுகிறது.'சிகரெட் பிடிப்பதால் ஒருவரது வாழ்க்கையில் தினமும் ஐந்து நிமிடம் குறைகிறதாம்.
அந்த புகையை நுகர்வதால், இருமல், சளி உருவாகி, ஆஸ்துமா பிரச்னை வரும்' என்கின்றனர் டாக்டர்கள்.புகை நமக்கு பகை எனத் தெரிந்தும், அதோடு உறவாடுவது, உயிருக்கு உலை வைக்கும் என்பதை அறிந்து, புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட முயற்சி செய்ய வேண்டும்.இன்று (மே 31) சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்.'புகை பிடிக்கும் பழக்கம்உள்ளவர்களுக்கு, தொற்று பரவ வாய்ப்பு அதிகம்' என்ற எச்சரிக்கையை மத்தியசுகாதாரத்துறைவிடுத்துள்ளது.
No comments:
Post a Comment