திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில், பள்ளி மாணவர்களுக்கு இணையவழி டிஜிட்டல் புகைப்படம் எடுத்தல் போட்டி நாளை (புதன்கிழமை) நடக்கிறது.
சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூர
ி
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் 6 இளநிலை பட்டப்படிப்புகளும், 3 முதுநிலை பட்டப்படிப்புகளும் உள்ளன. தொழில் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி துறை இக்கல்லூரிக்கு அறிவியல் ஆய்வுத்துறைக்கான அங்கீகாரத்தை வழங்கி உள்ளது. (https://www.eduntz.com/) கல்லூரியின் கணினி துறை, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை ஆகியவை என்.பி.ஏ. தரச்சான்றிதழ் பெற்றுள்ளன. ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி செய்முறை ஆய்வகங்கள், நூலகங்கள், அனைத்து துறைக்கும் பொதுவான மைய நூலகம் உள்ளன.
கல்லூரியின் அனைத்து இளநிலை துறைகளும், முதுகலை கணினி துறையும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் நிரந்தரமாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. மேலும், கல்லூரியின் கணினி துறை, மின்னணுவியல் தொடர்பியல் துறைக்கு ஆராய்ச்சி மையத்திற்கான அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கி உள்ளது. இக்கல்லூரியில் கணினி துறையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சாதனை படைத்து உள்ளனர். கல்லூரியில் குளிரூட்டப்பட்ட சிவந்தி கலையரங்கம், கருத்தரங்க அறைகள் உள்ளிட்ட பல நவீன கூடங்கள் உள்ளன.
வேலைவாய்ப்புகள்
கல்லூரியில் தரமான கல்வி வழங்குவதுடன் மாணவர்களின் எதிர்காலத்தில் அக்கறை கொண்டு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறது. இதற்கென பிரத்யேகமாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அமைக்கப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு ‘GATE’ (கேட்) தேர்வுக்கான பிரத்யேக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்மூலம் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று தரப்படுகிறது.
மாணவர்களின் திறமைகளை வளர்க்கும் விதமான சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. (https://www.eduntz.com) தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், துறைசார்ந்த அறிவு, தகவல் தொடர்பு, முடிவெடுக்கும் ஆற்றல் போன்ற திறன்களை மேம்படுத்தி கொள்ள வழிவகுக்கின்றது. மாணவர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இடையிலான இணைப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு ஆண்டுதோறும் மாநில அளவிலான மனிதவள சந்திப்பு நடத்தப்படுகிறது.
டிஜிட்டல் புகைப்படம் எடுத்தல் போட்டி
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியின் கணினி துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு DIGITAL PHOTOGRAPHY CONTEST என்ற இணையவழி டிஜிட்டல் புகைப்படம் எடுத்தல் போட்டி நாளை (புதன்கிழமை) நடக்கிறது.
இதில் கலந்து கொள்வதற்கு 10 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் http://bit.ly/csedigitalevent என்ற இணைப்பு மூலம் பங்கு பெறலாம். மேலும் விவரங்கள் அறிய 8248417148 அல்லது 9865213215 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இத்தகைய நிகழ்ச்சிகள் வெகு நாட்கள் வீட்டில் முடங்கி கிடக்கும் மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் மனசோர்வை போக்கி நலமுடன் வாழ வழிவகுக்கும்.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமையின் கீழ் கணினி துறை பேராசிரியர்கள் செய்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment